வெண்ணந்தூர் அருகே மாரியம்மன் கோவிலில் பபரப்பு

ராசிபுரம் அடுத்த வெண்ணந்தூர் அருகே மாரியம்மன் கோவிலுக்குள் மனித கழிவு வீசிய நபரால் பரபரப்பு ஏற்பட்டது.
நாமக்கல் மாவட்டம் வெண்ணந்தூர் ஒன்றியம் கோம்பைக்காடு பகுதியில் 150 க்கு மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர். இப்பகுதியில் உள்ள மாரியம்மன் கோவில் அருகே வசித்து வரும் ஜம்பு, 55 என்பவர் அமாவாசை நாளான நேற்று(7.5.2024) மாலை, மனித கழிவு சாணம் உள்ளிட்டவற்றை சட்டியில் எடுத்து வந்து கோவில் ஊஞ்சல் பகுதியில் இருந்து கோவிலிலுக்குள் வீசி உள்ளார். இதனால் பூஜைகள் செய்ய வந்த பொதுமக்கள் மூக்கை பிடித்துக் கொண்டு திரும்பினர். இச்சம்பவத்தால் பொதுமக்கள் ராசிபுரம் வட்டாட்சியர், வெண்ணந்தூர் காவல் நிலையத்துக்கு புகார் கொடுத்தனர். அந்த புகாரில், ஐம்பு மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளனர். மேலும் கடந்த 1952ல் ஜம்புவின் தாத்தா மாரியம்மன் கோவில் கட்ட பொதுமக்களுக்கு தானமாக நிலத்தைக் கொடுத்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில், கோவில் நிலத்தை ஐம்பு கேட்டு இது போன்ற நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளார் என அப்பகுதியை சேர்ந்த சிலர் கூறுகின்றனர். இதற்கு முன்பு, கோவில் முன்பு ஆடு, மாடு கட்டி வந்த நிலையில், தொடர்ந்து அங்கு வைக்கப்பட்டுள்ள சிசிடிவி கேமராவை உடைத்து உள்ளார். மேலும் தீபாராதனை தட்டு எடுத்து சென்றுள்ளார் என்றும், கோவில் முன் பூஜை செய்யும் போது குறுக்கே வந்து தகராறு செய்து கோவில் முன் கட்டிய மாலையை கழட்டி வீசியுள்ளார். தற்போது மனித கழிவு மற்றும் சாணம் ஆகியவற்றை வீசி இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags

Next Story