பேருந்து நம்பரை மாற்றியதால் குழப்பம்
பேருந்து நம்பரை மாற்றியதால் குழப்பம்
தூத்துக்குடி மாவட்டம் புதுக்கோட்டை அருகே சேர்வைக்காரன்மடம் ஊராட்சி வழியாக தூத்துக்குடி மற்றும் திருவைகுண்டம் அரசு பணிமனையில் இருந்து பேருந்துகள் இயக்கப்படுகிறது. கடந்த 3வருடங்களுக்கு முன்பதாக அனைத்து பேருந்துகளின் நம்பர்கள் மாற்றப்பட்டு புதிய நம்பர் போடப்பட்டு பேருந்து இயக்கப்பட்டு வருகின்றது. இது மக்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இந்த தடத்தில் இயக்கப்படும் பேருந்துகள் சரிவரி இயக்கப்படவில்லை. தினந்தோறும் வேறு தடங்களில் இயக்கப்படும் பேருந்துகளில் இந்த தடத்திற்கு உரிய பெயர் பலகைகளை மாற்றி பேருந்துகள் இயக்கப்படுகிறது.
52B என்ற பேருந்து 1987 முதலே இயக்கப்படுகிறது. இந்த ஊராட்சி வழியாக சுமார் 7தடவை தூத்துக்குடி பணிமனையில் இருந்து இயக்கப்பட்டு வந்தது.ஆனால் சமீப காலமாக 3தடவை இயக்கப்பட்டும் சில நாள்கள் இந்த பேருந்து காணாமல் போய்விடுகிறது. பலமுறை மனு அளிக்கப்பட்டும் உயர் அதிகாரிகளுக்கு தெரிவிக்கப்பட்டும் மெத்தனம் போக்கில் நிர்வாகம் உள்ளது. தற்போது 3தடவை வேறு வழியாக இயக்க நிர்வாகத்தின் மூலம் திட்டமிட்டப்பட்டுள்ளதாக தெரிகிறது. இதனை தடுத்தி நிறுத்திட வேண்டும். மேலும் ஊராட்சி வழியாக செல்லும் பேருந்துகளில் சேர்வைக்காரன்மடம் என்ற பெயர் காணப்படவில்லை. எடுத்துக்காட்டு புதிதாக இயக்கப்படும் 52A மற்றும் 52F பேருந்துகளின் பக்கவாட்டில் ஊராட்சி பெயர் இல்லை.
இதனை வன்மையாக கண்டிக்கிறோம். ஊராட்சி வழியாக திருவைகுண்டம் பணிமனையில் இருந்து வரும் 147 மற்றும் 307 சரிவர இயக்கப்படுவதில்லை. பல நேரங்களில் வேறு வழியாய் செல்லுகிறது. தனியார பேருந்துகள் காலை இரவு நேரங்களில் இயக்கப்படுவதில்லை. அனைத்து பேருந்துகளையும் இயங்கவேண்டும். கூடுதல் பஸ் விடவேண்டும். மேலும் சேர்வைக்காரன்மடம் ஊர் பெயரை பேருந்துகளில் எழுத வேண்டும். இரண்டு பணிமணையில் இயக்கப்படும் பஸ் நேர அட்டவணையை அளிக்க வேண்டும். தொடர்ந்து புறக்கணிக்கப்படும் எம் ஊராட்சி மக்கள் சார்பாக மீண்டும் திங்கள் தின கோரிக்கை அளித்துவிட்டு, நடவடிக்கை தொடர்ந்து தாமதமாகும் பட்சத்தில் பள்ளி மாணவ மாணவியர், ஊர்பொதுமக்கள் சார்பாக பஸ் மறியல் போராட்டம் நடத்தப்படும் என வார்டு உறுப்பினர்கள் மற்றும் உபதலைவர் தெரிவித்துள்ளனர்.