கூட்ட நெரிசல் : ரயில்களில் கூடுதல் ரயில் பெட்டிகள் இணைப்பு

கூட்ட நெரிசல் : ரயில்களில் கூடுதல் ரயில் பெட்டிகள் இணைப்பு
பைல் படம் 
கோடை விடுமுறை கூட்ட நெரிசலை சமாளிக்க சில ரயில்களில் கூடுதல் ரயில் பெட்டிகள் இணைக்கப்பட உள்ளது.
ரயில்களில் கூடுதல் பெட்டிகள் கோடை விடுமுறை கூட்ட நெரிசலை சமாளிக்க சில ரயில்களில் கூடுதல் ரயில் பெட்டிகள் இணைக்கப்பட உள்ளது. அதன்படி மே 17 முதல் மே 22 வரை சென்னை எழும்பூர் - குருவாயூர் ரயிலிலும் (16127), மே 17 முதல் மே 23 வரை குருவாயூர் - சென்னை எழும்பூர் ரயிலிலும் (16128), மே 16 முதல் மே 20 வரை திருவனந்தபுரம் - மதுரை அமிர்தா ரயிலிலும் (16343), மே 17 முதல் மே 21 வரை மதுரை - திருவனந்தபுரம் அமிர்தா ரயிலிலும் (16344) கூடுதலாக தலா ஒரு இரண்டாம் வகுப்பு படுக்கை வசதி பெட்டி இணைக்கப்படும்.

Tags

Next Story