காஞ்சியில் மீன் கடைகளால் பூக்கடைசத்திரத்தில் நெரிசல்

காஞ்சியில் மீன் கடைகளால் பூக்கடைசத்திரத்தில் நெரிசல்

காஞ்சியில் மீன் கடைகளால் பூக்கடைசத்திரத்தில் நெரிசல்

காஞ்சிபுரம் - வையாவூர் சாலையிலும், மீன் கடைகளால் போக்குவரத்து நெரிசல். வாகன நெரிசல் இன்றி கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்து உள்ளது.
காஞ்சிபுரம், பூக்கடைசத்திரத்தில் இருந்து, காஞ்சிபுரம் பேருந்து நிலையத்திற்கு செல்லும் மார்க்கமாக பல்வேறு கடைகள் உள்ளன. இந்த கடைகளுக்கு முன், மீன் கடைகள் வைக்கின்றனர். குறிப்பாக, ஞாயிறு, புதன் ஆகிய தினங்களில், மீன் கடைகளுக்கு முன், நுாற்றுக்கணக்கான இருசக்கர வாகனங்கள் மற்றும் சைக்கிள்களை நிறுத்திவிட்டு செல்கின்றனர். இதனால், காஞ்சிபுரத்தில் இருந்து, தாமல்வார் தெரு வழியாக சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை மார்க்மாக செல்லும் வாகனங்கள் மற்றும் சென்னை, வேலுார், அரக்கோணம் ஆகிய மார்க்கங்களில் இருந்து, காஞ்சிபுரம் பேருந்து நிலையத்திற்கு செல்லும் வாகனங்கள் நெரிசலில் சிக்கி தவிக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படுகிறது. இதே நிலை தான், காஞ்சிபுரம் - வையாவூர் சாலையிலும், மீன் கடைகளால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. எனவே, காஞ்சிபுரம் நகர போக்குவரத்து துறையினர், வாகன நெரிசல் இன்றி கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்து உள்ளது."

Tags

Read MoreRead Less
Next Story