சாலை ஓரம் நிறுத்தப்படும் வாகனங்களால் நெமிலியில் நெரிசல்

சாலை ஓரம் நிறுத்தப்படும் வாகனங்களால் நெமிலியில் நெரிசல்
X

வாகனங்கள் போக்குவரத்து நெரிசல்

நெமிலி பஜார் வீதி குறுகிய பாதையாக இருப்பதால், ஒரு வாகனம் செல்லும் போது, மற்றொரு வாகனம் எதிரே செல்லும் போது, வாகன நெரிசல் ஏற்படுகிறது

காஞ்சிபுரம் அடுத்த, ராணிப்பேட்டை மாவட்டத்தைச் சேர்ந்த நெமிலி பஜார் பகுதி உள்ளது. இந்த பஜார் வீதி வழியாக, சேந்தமங்கலம் மார்க்கத்தில் இருந்து செல்லும் வாகனங்கள் மற்றும் அரக்கோணத்தில் இருந்து, நெமிலி பஜார் வீதி வழியாக பனப்பாக்கம், பணாவரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிக்கு அரசு, தனியார் பேருந்துகள் செல்கின்றன.

நெமிலி பஜார் வீதி குறுகிய பாதையாக இருப்பதால், ஒரு வாகனம் செல்லும் போது, மற்றொரு வாகனம் எதிரே செல்லும் போது, வாகன நெரிசல் ஏற்படுகிறது. இதுதவிர, கடைகள் முன், சாலை ஓரம் நிறுத்தப்படும் வாகனங்களால், மிகுந்த நெரிசல் ஏற்படுகிறது. எனவே, பிரதான சாலை ஓரம் நிறுத்தப்படும் வாகனங்களை, முற்றிலும் நிறுத்துவதை தவிர்க்க வேண்டும் என, பொது மக்கள் இடையே கோரிக்கை எழுந்துள்ளது.

Tags

Next Story