வாகன ஆக்கிரமிப்பால் ராமாபுரத்தில் நெரிசல்
ராமாபுரம் பாரதி சாலையில் உள்ள வாகன ஆக்கிரமிப்பால், காலை மற்றும் மாலை கடும் நெரிசல் ஏற்பட்டு வருகிறது.
ராமாபுரம் பாரதி சாலையில் உள்ள வாகன ஆக்கிரமிப்பால், காலை மற்றும் மாலை கடும் நெரிசல் ஏற்பட்டு வருகிறது. வளசரவாக்கம் மண்டலம், ராமாபுரத்தில் நெசப்பாக்கம்,- சின்ன போரூர் பகுதிகளை இணைக்கும் பிரதான சாலையாக, பாரதி சாலை உள்ளது. நெடுஞ்சாலை துறை பராமரிப்பில் இருந்த இச்சாலை, தற்போது மாநகராட்சி பராமரிப்பில் உள்ளது.
இச்சாலையில், காவல் நிலையம், தனியார் கல்லுாரி மற்றும் மருத்துவமனை ஆகியவை அமைந்துள்ளதால், எந்நேரமும் போக்குவராத்து அதிகம் காணப்படும். ஆற்காடு சாலை மற்றும் மவுன்ட் பூந்தமல்லி நெடுஞ்சாலையில் மெட்ரோ ரயில் பணிகள் நடப்பதால், பாரதி சாலையில் வாகன போக்குவரத்து அதிகரித்துள்ளது. இந்நிலைியல், பாரதி சாலையோரம் நிறுத்தப்படும் வாகன ஆக்கிரமிப்பு அதிகரித்துள்ளது.
இதனால், காலை, மற்றும் மாலை நேரங்களில் ராமாபுரம் காவல் நிலையம் முதல் அரசர மரம் சந்திப்பு வரையும், நெசப்பாக்கம் எம்.ஜி.ஆர்., காவல் நிலையம் முதல் ராாமாபுரம் அரசர மரம் சந்திப்பு வரையும் போக்குவரத்து நெரிசலில் வாகனங்கள் வரிசை கட்டி நிற்கும் நிலை உள்ளது. எனவே, இச்சாலையில் உள்ள வாகன ஆக்கிரமிப்புகளை அகற்றுவதுடன், சீரான போக்குவரத்திற்கு வழிவகை செய்ய வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.