மத்திய கூட்டுறவு வங்கியின் நிர்வாகிகளாக பொறுப்பேற்றுள்ள அனைவருக்கும் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் வாழ்த்துக்கள்!

மத்திய கூட்டுறவு வங்கியின் நிர்வாகிகளாக பொறுப்பேற்றுள்ள அனைவருக்கும் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் வாழ்த்துக்கள்!

ஆட்சியர் உமா

நாமக்கல் மாவட்டத்திற்கென பிரத்தியேகமாக ஒரு புதிய மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கியை உருவாக்கிட தமிழ்நாடு முதலமைச்சர் ஆணையிட்டதற்கிணங்க நாமக்கல் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி உருவாக்கி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
நாமக்கல் மாவட்டத்திற்கென பிரத்தியேகமாக ஒரு புதிய மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கியை உருவாக்கிட தமிழ்நாடு முதலமைச்சர் ஆணையிட்டதற்கிணங்க நாமக்கல் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி உருவாக்கி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இதுகுறித்து நாமக்கல் மாவட்ட ஆட்சியர் உமா வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது: தமிழ்நாட்டில் மொத்தம் 23 மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகள் பதிவு செய்யப்பட்டு செயல்பட்டு வருகிறது. இறுதியாக திருவண்ணாமலை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி 01.10.1992 இல் பதிவு செய்யப்பட்டது.அதன் பிறகு 31 ஆண்டுகளாக பல மாவட்டங்கள் பிரிக்கப்பட்ட நிலையிலும் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகள் பிரிக்கப்படாமல் இருந்தது. நாமக்கல் மாவட்ட விவசாயிகளின் நலன் கருதியும் மற்றும் பல்வேறு தொழில் துறையினர் பயன்பெறும் வகையிலும், பல்வேறு சிறப்புகளை கொண்ட நாமக்கல் மாவட்டத்திற்கென பிரத்தியேகமாக ஒரு புதிய மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கியை உருவாக்கிட தமிழ்நாடு முதலமைச்சர் ஆணையிட்டதற்கிணங்க நாமக்கல் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி உருவாக்கி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. புதியதாக உருவாக்கப்பட்டுள்ள நாமக்கல் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் நிர்வாகிகளாக பொறுப்பேற்றுள்ள அனைவருக்கும் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் வாழ்த்துக்கள். இவ்வங்கி அனைத்து தரப்பு மக்களின் தேவைகளை பூர்த்தி செய்திடும் வகையில் சிறப்பான சேவைகளை வழங்கிட நாமக்கல் மாவட்ட மக்களின் சார்பாகவும், மாவட்ட நிர்வாகத்தின் சார்பாகவும் மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம். இவ்வாறு மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

Tags

Next Story