நாமக்கல் கிழக்கு நகரத்தில் அருந்ததியர்களுக்கான சமூக நீதியை நிலைநாட்டிய முன்னாள் முதல்வர் கலைஞருக்கு வாழ்த்து
அருந்ததியற்கான மூன்று சதவீத இட ஒதுக்கீடு மூலம் சமூக நீதியை நிலைநாட்டிய முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் தொலைநோக்கு சிந்தனையை உச்சநீதிமன்றத்தில் ஏழு நீதிபதிகள் கொண்ட அமர்வு உறுதி செய்து இருப்பது திராவிட நாடு அரசு சமூக நீதிப் பயணத்தின் மணிமகுடம்.
இதனைக் கொண்டாடும் விதமாக நாமக்கல் கிழக்கு மாவட்டக் கழகச் செயலாளரும், மாநிலங்களவை உறுப்பினரும், நாமக்கல் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கித் தலைவருமான கே.ஆா்.என்.இராஜேஸ்குமார் அறிவுறுத்தலின்படி, வனத்துறை அமைச்சர் மருத்துவா் மா.மதிவேந்தன், சட்டமன்ற உறுப்பினா் பெ.இராமலிங்கம் ஆகியோர் ஆலோசனையின் பேரில் நாமக்கல் கிழக்கு நகரத்திற்குட்பட்ட சின்ன முதலைப்பட்டி வடக்கு காலனி, ராமாபுரம் புதூர் காலனி, பேட்டை காலனி, என்.கொசவம்பட்டி காமராஜர் நகர், ஆகிய பகுதிகளில் கிழக்கு நகர அவைத்தலைவர் வெங்கடாசலம், தொண்டரணி இளங்கோவன்,
வார்டு செயலாளர்கள் ஜெயராமன், பாலகிருஷ்ணன், சௌந்தர பாண்டியன், கதிரேசன், ரமேஷ், ஜெயந்தன், ஜெயராமன், கதிரவன், நகர் மன்ற உறுப்பினர்கள் சசிகலா சௌந்தர பாண்டியன், மாயாஸ் பழனிச்சாமி, லீலாவதி சேகர், கிருஷ்ணமூர்த்தி, இளைஞர் அணி அமைப்பாளர் சிலம்பரசன், மாவட்ட ஆதிதிராவிடர் நலக்குழு துணை அமைப்பாளர் பழனிவேல், நகர தொழில்நுட்ப அணி ராகுல், சுபாஷினி மற்றும் கழக நிர்வாகிகள் கண்ணன், கார்த்திக், விசுமணி, வளர்மதி, அமுதா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.