12ம் வகுப்பு பொதுத் தேர்வில் சாதித்த மாணவிகளுக்கு பாராட்டு

12ம் வகுப்பு பொதுத் தேர்வில் சாதித்த மாணவிகளுக்கு பாராட்டு

 மாணவிகளுக்கு பாராட்டு

இரஞ்சன்குடி அரசு மேல்நிலைப் பள்ளியில் 12ம் வகுப்பு பொதுத்தேர்வில் முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவிகளை பாராட்டி பரிசு வழங்கப்பட்டது.
இரஞ்சன்குடி அரசு மேல்நிலைப் பள்ளியில் குழந்தை தொழிலாளர் முறையை அகற்றுவதற்கான உறுதிமொழி ஏற்கும் நிகழ்வு நடைபெற்றது. அதனை தொடர்ந்து 12-ம் வகுப்பு பொதுத் தேர்வில் முதல் மூன்று இடம் பெற்ற மாணவிகளுக்கு பரிசு வழங்கி பாராட்டப்பட்டது. முதல் இடம் பெற்றவருக்கு ரூ.5000. 2-ம் இடம் பெற்றவருக்கு ரூ.2500, 3ம் இடம் பெற்றவருக்கு ரூ.1000 என பரிசுத் தொகை வழங்கி பாராட்டப்பட்டது. இதில் பள்ளி தலைமை ஆசிரியர் ராஜா சுசீந்திரன் குமார் முன்னாள் கவுன்சிலர் கோவிந்தராஜ் துரைராஜ் மதியழகன் மற்றும் ஆசிரியர்கள் பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags

Read MoreRead Less
Next Story