கைப்பந்து போட்டியில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பாராட்டு

கைப்பந்து போட்டியில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பாராட்டு

மாணவிகளுக்கு பாராட்டு 

தேசிய கைப்பந்து போட்டியில் தமிழக அணி சார்பில் பங்கேற்று பதக்கம் வென்ற சேலம் மாணவிகளுக்கு பாராட்டு விழா நடந்தது.
இந்திய அளவில் 14 வயதுக்குட்பட்ட பள்ளி மாணவிகளுக்கான கைப்பந்து போட்டி ஒடிசாவில் நடைபெற்றது. இதில் தமிழக அணி சார்பில் சேலம் மாணவிகள் 2 பேர் கலந்து கொண்டு வெண்கல பதக்கம் பெற்றனர். 17 வயதுக்குட்பட்ட மாணவிகளுக்கான கைப்பந்து போட்டி திருச்சியில் நடைபெற்றது. இதில் தமிழக அணி சார்பில் சேலம் மாணவிகள் 3 பேர் கலந்துகொண்டு வெள்ளிப்பதக்கம் பெற்றனர். இவர்களை சேலம் மாவட்ட கைப்பந்து கழக தலைவர் ராஜ்குமார் பாராட்டி வாழ்த்து தெரிவித்தார். இதில் செயலாளர் சண்முகவேல், பொருளாளர் விஜயகுமார், துணை தலைவர்கள் ராஜா ராம், அகிலாதேவி, ராஜேந்திரன், இணை செயலாளர்கள் வடிவேல், வேங்கையன், நிர்வாகி நந்தன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story