காங்கிரஸ் கூட்டணி பலமாக உள்ளது  செல்வபெருந்தகை பேட்டி 

காங்கிரஸ் கூட்டணி பலமாக உள்ளது  செல்வபெருந்தகை பேட்டி 

காங்கிரஸ் கூட்டணி பலமாக உள்ளது  என தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வபெருந்தகை  கன்னியாகுமரியில்  பேட்டி  அளித்தார்.


காங்கிரஸ் கூட்டணி பலமாக உள்ளது  என தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வபெருந்தகை  கன்னியாகுமரியில்  பேட்டி  அளித்தார்.

கன்னியாகுமரி மாவட்டத்திற்கு வருகை தந்த தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப் பெருந்தகை இன்று அகஸ்தீஸ்வரத்தில் உள்ள முன்னாள் எம்பி வசந்தகுமார் நினைவிடத்தில் அவரது உருவ சிலைக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:- திராவிட முன்னேற்ற கழகம் வைத்திருக்கின்ற பணத்தை எல்லாம் வெளியே கொண்டு வருவேன் என்று மோடி கூறி உள்ளார்.

ஒன்பதரை வருடத்திற்கு முன்னர் திருச்சியில் பேசிய மோடி காங்கிரஸ் வெளிநாடு வங்கிகளில் வைத்திருக்கும் பணத்தை எல்லாம் கொண்டு வந்து ஒவ்வொரு வாக்காளர்க்கும் 15 லட்சம் ரூபாய் கொடுப்பேன் என்றார். கொடுத்தாரா? எல்லோரும் காத்துக் கொண்டிருக்கின்றனர்.

மோடி குடும்பம் என்றால் அது அதானி குழுமம். சிறு குறு தொழில் இந்தியாவின் முதுகெலும்பு. பண மதிப்பிழப்பு மூலமாக அவற்றை எல்லாம் சிதைத்துள்ளார். அவரது நோக்கம் எல்லாம் இந்திய அரசியலமைப்பை அழித்துவிட்டு நாக்பூரை தலைமையகமாக வைத்து புதிய அரசியல் அமைப்பு சட்டத்தை எழுத வேண்டும் என்பதுதான். இப்போது கல்வித்துறையிலும் மோடி கை வைக்கிறார். மக்களை ஏமாற்றுவதன் அவர்கள் வேலை.

பாரதிய ஜனதா அறிவித்த வேட்பாளர்கள் ஓடிக் கொண்டிருக்கின்றனர். ஆனால் எங்களது கூட்டணி பலமாக உள்ளது. பேச்சு வார்த்தை நடந்து வருகிறது. இந்தியா முழுவதும் கூட்டணி ஒப்பந்தம் கையெழுத்தாகி வருகிறது. இவ்வாறு கூறினார். இந்த பேட்டியின் போது விஜய் வசந்த் எம் பி, தொகுதி பார்வையாளர் ராஜகுமார் எம்எல்ஏ, ஸ்ரீ வல்லபிரசாத் உட்பட நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

Tags

Next Story