விளவங்கோடு தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் அறிவிப்பு
தாரகை கத்பட்
விளவங்கோடு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ் கட்சி வேட்பாளராக தாரகை கத்பட் அறிவிப்பு.
பாராளுமன்ற தேர்தலுடன் குமரி மாவட்டத்தில் உள்ள விளவங்கோடு சட்டமன்ற தொகுதிக்கு இடைத்தேர்தல் நடக்கிறது. இந்த தொகுதி காங்கிரசின் கோட்டையாகவே இருந்து வந்த நிலையில், இந்த தொகுதியில் அந்த கட்சி மட்டுமின்றி, அ.தி.மு.க., பா.ஜ.க., நாம் தமிழர் ஆகிய கட்சிகளும் தேர்தல் களத்தில் குதித்துள்ளன. இதனால் விளவங்கோடு தொகுதி இடைதேர்தலில் நான்கு முனைப்போட்டி ஏற்பட்டிருக்கிறது. அ.தி.மு.க. சார்பில் ராணியும், பாரதிய ஜனதா சார்பில் நந்தினியும், நாம் தமிழர் கட்சி சார்பில் ஜெமிலாவும் களமிறக்கப்பட்டு உள்ளனர். மூன்று கட்சிகளுமே பெண் வேட்பாளரை களமிறக்கி தேர்தல் களத்தில் தீவிரமாக பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார்கள். தேர்தல் களத்தில் குதித்துள்ள இந்த மூன்று வேட்பாளர்களுமே தேர்தல் களத்திற்கு புதியவர்கள் ஆவர்.ஆகவே அவர்கள் கட்சி நிர்வாகிகளின் ஆலோசனையின்படி, வாக்கு சேகரிப்பு பணியை மேற்கொண்டு வருகிறார்கள். விளவங்கோடு தொகுதியில் கடந்த முறை நடந்த சட்டமன்ற தேர்தலில் பா.ஜ.க. கணிசமான அளவு வாக்குகளை பெற்றுள்ளது. காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட வேட்பாளர் அறிவிக்கப்படாததால் குழப்பம் நிலவி வந்தது இந்த நிலையில் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிடுவதற்கு தாரகை கதபட் என்பவரை வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். இவர் காங்கிரஸ் கட்சியின் மாநில பொதுச் செயலாளரும் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினருமாக இருந்து வருகிறார்.
Next Story