காங்கிரஸ் கட்சி வேட்பாளர் மாணிக்கம் தாகூர் வாக்கு சேகரிப்பு !

காங்கிரஸ் கட்சி வேட்பாளர்  மாணிக்கம் தாகூர் வாக்கு சேகரிப்பு !
காங்கிரஸ் கட்சி வேட்பாளர் மாணிக்கம் தாகூர் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்
காங்கிரஸ் கட்சி வேட்பாளர் மாணிக்கம் தாகூர் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

விருதுநகர் மக்களவை காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம் தாகூருக்கு இன்னொரு பெயர் இருக்கு அது என்னன்னா மாணிக் பாஷா.. யாரும் அடிக்க முடியாது. பாஷா மாணிக் பாஷா. பாட்ஷா பாரு பாட்ஷா பாரு ரஜினியின் பாட்ஷா படத்தின் பாடலை பாடி என நிர்வாகி ஒருவர் வாக்கு சேகரிக்கும் வீடியோ பெரும் வைரலாகி வருகிறது.

விருதுநகர் பெரிய பள்ளிவாசல் தெருக்களில் காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம் தாகூர் மற்றும் கூட்டணி கட்சியினருடன் தீவிர வாக்கு சேகரிப்பு தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது அவர் கூறியதாவது, பத்தாண்டு காலம் ஆட்சி செய்த மோடி அரசு ஆர் எஸ் எஸ் இந்துத்துவ அமைப்புகள் சிறுபான்மை மக்கள் மீது வன்மத்தை காட்டி வருகிறது.

மோடி அரசு பிக் பாக்கெட் அடித்து பொது மக்களின் பணத்தை பெரிய முதலாளிகளிடம் கொடுக்கிறது. சிறுபான்மையின மக்களின் பாதுகாக்கும் அரசாக திமுக காங்கிரஸ் கூட்டணி திகழ்ந்து வருகிறது. பாஜக இந்து முஸ்லிம் மதவாதத்தைக் கொண்டு அரசியல் செய்கிறது. விருதுநகரில் மத நல்லிணக்கத்தை சீர்குலைக்க பாய்கிறது. இதன் முயற்சி ஒருபோதும் நடைபெறாது. விருதுநகர் மத நல்லிணக்கத்திற்கான அனைத்து சமூக மக்களும் ஜாதி மதம் வேறுபாடின்றி ஒற்றுமையுடன் வாழ்ந்து வருகின்றனர். பாஜகவின் மதவாத வெறுப்பு அரசியல் ஒருபோதும் எடுபடாது.

சிறுபான்மையின மக்களின் பாதுகாவலனாக திமுக காங்கிரஸ் கூட்டணி என்றென்றும் தொடரும் என தெரிவித்தார். அதனைத் தொடர்ந்து பிரச்சாரத்தை முடித்துவிட்டு சென்ற காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாகூருக்கு இஸ்லாமிய குடும்பத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் வெயிலின் தாக்கத்தை தீர்த்துக்கொள்வதற்காக குளிர்ச்சியான பழரசம் ஜூஸ் வழங்கினார். அதனை வேட்பாளர் வாங்கி பருகி தாகத்தை தீர்த்துக் கொண்டார். அதன்பின்னர் காங்கிரஸ் நிர்வாகி ஒருவர் மாணிக்கம் தாகூர் யாரும் அடிக்க முடியாது.

மாணிக் தாகூர் அல்ல மாணிக் பாட்ஷா.. பாட்ஷா பாரு பாஷா பாரு என பாட்ஷா படத்தின் பாடலை பாடி உற்சாகமாக பொதுமக்களிடம் வாக்கு சேகரித்தார். மேலும் விருதுநகர் கல் பள்ளிவாசலில் ஜமாத் நிர்வாகிகளை சந்தித்து தனக்கு வாக்களிக்கும்படி அவர்களிடம் ஆதரவு கூறினார். நிர்வாகிகளும் முழு ஆதரவு உங்களுக்குத்தான் என தெரிவித்தனர்.

Tags

Read MoreRead Less
Next Story