திருப்பரங்குன்றத்தில் காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம் தாகூர் பிரச்சாரம்

திருப்பரங்குன்றத்தில் காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம் தாகூர் பிரச்சாரம்

மோடியின் தேர்தல் அறிக்கை வெறும் காகிதமாக உள்ளது. ஆக்கப்பூர்வமாக எதுவும் இல்லை என திருப்பரங்குன்றத்தில் மாணிக்கம் தாகூர் பேட்டி அளித்தார்.


மோடியின் தேர்தல் அறிக்கை வெறும் காகிதமாக உள்ளது. ஆக்கப்பூர்வமாக எதுவும் இல்லை என திருப்பரங்குன்றத்தில் மாணிக்கம் தாகூர் பேட்டி அளித்தார்.
மோடியின் தேர்தல் அறிக்கை வெறும் காகிதமாக உள்ளது. ஆக்கப்பூர்வமாக எதுவும் இல்லை. அவரின் வாயில் வடை சுடுகின்ற பாணி தொடர்கிறது. இருப்பதை சுருட்டிக் கொண்டு எப்படி காலத்தை ஓட்டலாம் என்பதில் மோடி அரசு கவனமாக இருப்பது தெரிகிறது. -விருதுநகர் காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம் தாகூர் பேட்டி விருதுநகர் பாராளுமன்ற தொகுதியின் இந்தியா கூட்டணி வேட்பாளர் மாணிக்கம் தாகூர். திருப்பரங்குன்றம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட கூத்தியார்குண்டு, கருவேலம்பட்டி ஆகிய பகுதிகளில் பிரச்சாரம் மேற்க கொண்டார். அப்போது செய்தியாளர்களை சந்தித்து அவர் கூறியதாவது: மோடியின் தேர்தல் அறிக்கை வெறும் காகிதமாக உள்ளது. ஆக்கப்பூர்வமாக எதுவும் இல்லை. அவரின் வாயில் வடை சுடுகின்ற பாணி தொடர்கிறது. இருப்பதை சுருட்டிக் கொண்டு எப்படி காலத்தை ஓட்டலாம் என்பதில் மோடி அரசு கவனமாக இருப்பது தெரிகிறது.
எய்ம்ஸ் கட்டுமானத்திற்கு முன்னெடுப்பு இல்லை என்று அதிமுக வேட்பாளர் விஜய பிரபாகரன் கூறியது குறித்த கேள்விக்கு:
அதிமுகவினர் தான் எய்ம்சை கொண்டு வந்ததாக கூறினார்கள் தற்போது அவர்களே இதை மாற்றி பேசுவது வினோதமாக உள்ளது. உதயநிதி ஸ்டாலின் தான் எய்ம்ஸ் பிரச்சனையை உலகிற்கு எடுத்துச் சொன்னவர், அப்படி இல்லை என்றால் மோடி அரசு எய்ம்ஸ் கட்டி திறக்கப்பட்டு நடைபெறுகிறது என்று நம்ப வைத்து இருப்பார்கள். உத்தர் பிரதேசத்தில் பிரதமர் மோடி ராமநாதபுரம் பற்றி கூறியது குறித்த கேள்விக்கு: ஒவ்வொரு முறையும் முகமூடி மாற்றுவது ஆர்எஸ்எஸ் இன் பாணி. தமிழக மக்கள் இதை மன்னிக்கப் போவதில்லை பாஜக இதற்காக தண்டிக்கப்படும். நேற்று இரவு அண்ணாமலை தர்ணாவில் ஈடுபட்டது குறித்த கேள்விக்கு: தோல்வி பயம் கண்ணுக்கு தெரிவதால் அண்ணாமலை நாடகம் ஆடுகிறார். கோயமுத்தூரில் தேர்தலை நிறுத்துவதற்காக சரி செய்கிறார்கள் என்றார்.

Tags

Next Story