காங்கிரஸ் வேட்பாளர் விஜய் வசந்த் குளச்சல் பகுதியில் பிரச்சாரம் 

காங்கிரஸ் வேட்பாளர் விஜய் வசந்த் குளச்சல் பகுதியில் பிரச்சாரம் 

பிரச்சாரம் 

காங்கிரஸ் வேட்பாளர் விஜய் வசந்த் குளச்சல் பகுதியில் பிரச்சாரம் 
கன்னியாகுமரி பாராளுமன்ற தொகுதி இந்தியா கூட்டணி வேட்பாளர் விஜய் வசந்த் இன்று குளச்சல் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வட்டம் பகுதியில் பிரச்சாரத்தை துவக்கினார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பெல்லார்மின் துவக்கி வைத்தார். நாகர்கோவில் மாநகராட்சி மேயர் மகேஷ், சட்டமன்ற உறுப்பினர் பிரின்ஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் செல்லச்சாமி, உள்ளிட்ட இந்தியா கூட்டணி கட்சிகளின் மாவட்ட நிர்வாகிகள் தொண்டர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர் வாக்கு சேகரிக்க சென்ற வெற்றி வேட்பாளர் விஜய் வசந்த்திற்கு மேள தாளம் முழங்க ஆரத்தி எடுத்தும் மலர் தூவியும், பொன்னாடைஅணிவித்தும் மாலை அணிவித்தும் பொதுமக்கள் உற்ச்சாக வரவேற்பு அளித்தனர். வாக்குசேகரிப்பின் போது பேசிய வெற்றி வேட்பாளர் விஜய் வசந்த் பேசியதாவது:- நம் நாட்டை ஆள்வதற்கு மக்களுக்கான பிரதமர் வேண்டுமா அல்லது ஏழை மக்களை வஞ்சித்து கார்ப்பரேட் முதலாளிகளுக்கு துணை போகும் பிரதமர் வேண்டுமா என்பதை தீர்மானிக்கும் நேரம் வந்துவிட்டது. அந்த நாள் தான் வருகின்ற 19 ஆம் தேதி அன்று நீங்கள் அனைவரும் சிந்தித்து வாக்களிக்க வேண்டும். தேர்தலில் வாக்கு வேண்டும் என்பதற்காக மக்களை ஏமாற்றும் வகையில் ரோட் ஷோ என்ற நாடகத்தை நடத்தி வருகின்றனர் இதற்கு ஒருபோதும் தமிழக மக்களும் குமரி மக்களும் ஏமாற மாட்டார்கள். நமது குமரி மாவட்டத்தின் வளர்ச்சிக்காக தொடர்ந்து அனைத்து முயற்சிகளையும் நான் மேற்கொள்வேன் என பேசினார்.

Tags

Next Story