நாகர்கோவிலில் காங்கிரஸ் வேட்பாளர் விஜய் வசந்த் பிரச்சாரம்

நாகர்கோவிலில் காங்கிரஸ் வேட்பாளர் விஜய் வசந்த் பிரச்சாரம்

பிரச்சாரம்

கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதியில் இந்திய கூட்டணி வேட்பாளர் விஜய் வசந்த் பிரச்சாரம்.
கன்னியாகுமரி மாவட்டம் முழுவதும் தீவிர வாகன பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். நாகர்கோவில் மாநகராட்சி பகுதி பார்வதிபுரம் பிள்ளையார் கோவிலில் சாமி தரிசனம் செய்துவிட்டு திறந்த வாகன பிரச்சாரத்தை தொடங்கினார். தொடர்ந்து அவர் பள்ளிவிளை, வாத்தியார் விளை, ஒழுகின சேரி, வடசேரி உள்ளிட்ட பல பகுதிகளில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு கை சின்னத்திற்கு வாக்குகள் கேட்டு அவர் பொதுமக்களிடம் பேசியதாவது:- நீண்ட நாட்களாக கிடப்பில் கிடந்த நான்கு வழிச்சாலை திட்டத்துக்காக மத்திய அரசிடம் கோரிக்கை வைத்து, தற்போது பணிகள் நடைபெற்று வருகின்றன. நாகர்கோவில் ரயில் நிலையம் சீரமைக்கப்பட வேண்டும் என்பதற்காக எடுத்த முயற்சியால் நாகர்கோவில் ரயில் நிலையத்தை சீரமைக்கும் பணிகள் தற்போது வேகமாக நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் காங்கிரஸ் திமுக கூட்டணியின் முதல் வெற்றியை கன்னியாகுமரியில் இருந்து தொடங்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். இந்த பிரச்சாரத்தில் குமரி கிழக்கு மாவட்ட திமுக செயலாளரும், மேயருமான மகேஷ் உள்ளிட்ட கூட்டணி கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Tags

Read MoreRead Less
Next Story