காங்கிரஸ் வேட்பாளர் விஜய் வசந்த் இறுதி கட்ட பிரச்சாரம்

காங்கிரஸ் வேட்பாளர் விஜய் வசந்த் இறுதி கட்ட பிரச்சாரம்

 மண்டைக்காட்டில் காங்கிரஸ் வேட்பாளர் விஜய் வசந்த் இறுதி கட்ட பிரச்சாரம் செய்து, வாக்குகளை சேகரித்தார். 

மண்டைக்காட்டில் காங்கிரஸ் வேட்பாளர் விஜய் வசந்த் இறுதி கட்ட பிரச்சாரம் செய்து, வாக்குகளை சேகரித்தார்.

கன்னியாகுமரி மக்களவைத் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் விஜய் வசந்த் இன்று காலை மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலில் இருந்து பிரச்சாரத்தை தொடங்கினார். அப்போது வாக்கு சேகரிக்க வந்த விஜய் வசந்க்கு ஆளுயர மாலை அணிவித்தும், மேளதாளங்கள் முழங்க சால்வை அணிவித்தும், மலர் தூவியும், ஆரத்தி எடுத்தும் உற்சாகமாக வரவேற்பளித்தனர்.

இதை அடுத்து காங்கிரஸ் வேட்பாளர் விஜய் வசந்த் பேசியதாவது:- நாட்டில் அமைதியும் சமாதானமும் ஒற்றுமையும் நிலவ மக்கள் அனைவரும் அன்புடனும் சந்தோஷத்துடன் வாழ்வதற்கு இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வரவேண்டும். ராகுல் காந்தி பிரதமராக அமர வேண்டும். அப்போதுதான் நாட்டில் ஜனநாயகமும் அரசியலமைப்புச் சட்டமும் காப்பாற்றப்படும்.

குமரி மாவட்டத்தில் தேன், வாழை, பலா, முருங்கை, தேங்காய் போன்ற பொருட்களை உலகளவில் ஏற்றுமதி செய்வதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும். ஆரம்ப சுகாதார நிலையம் பள்ளிக்கூடங்கள் அமைக்க அனைத்து நடவடிக்களும் எடுக்கப்படும் என்று தெரிவித்துக் கொள்கிறேன். இந்தியா கூட்டணியில் காங்கிரஸ் கட்சி சார்பில் பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் உங்கள் விஜய் வசந்தாகிய எனக்கு கை சினத்தில் வாக்களியுங்கள் என்று பேசினார்.

இந்த பிரச்சாரத்தில் பிரின்ஸ் எம்எல்ஏ, குமரி கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் மேயர் மகேஷ், கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் கே டி உதயம், திமுக மீனவர் அணி செயலாளர் ஸ்டாலின், திமுக ஒன்றிய செயலாளர் சுரேந்திர குமார் உட்பட ஏராளமான கலந்து கொண்டனர்.

Tags

Next Story