கல்வெட்டில் பெயர் பொறிப்பதில் காங்கிரஸ் - கம்யூனிஸ்ட் மோதல்

கல்வெட்டில் பெயர் பொறிப்பதில் காங்கிரஸ் - கம்யூனிஸ்ட் மோதல்

போலீசார் விசாரணை 

நித்திரவிளை அருகே உயர் மின்கோபுர மின் விளக்கு கல்வெட்டில் பெயர் பொறிப்பதில் காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சியினரிடையே ஏற்பட்ட மோதலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாவட்ட செயலாளர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.

நித்திரவிளை அருகே நம்பாளி பகுதியில் பாராளுமன்ற தொகுதி மேம் பாடு நிதியில் ரூ7.40 லட் சம் மதிப்பீட்டில் உயர் கோபுர சோலார் மின்விளக்கு அமைக்கப்பட்டது. விளக்கின் கீழ் கடந்த 8ம் தேதி பெயர் மார்க்சிஸ்ட் பொறிக்கப்பட்ட கல் வெட்டு வைக்கப்பட்டது, வைக்கப்பட்ட கல் வெட்டை ஒப்பந்ததாரர் திடீரென எடுத்து சென்றார். அன்றையதினம் வைக்கப்பட்ட கல்வெட டில் கொல்லங்கோடு நகராட்சி 11ம் வார்டு கம்யூனிஸ்ட் உறுப்பினர் பெறோஸ்கான் பெயர் இருந்தது.

இந்நிலையில் நேற்று மாலை 6 மணியளவில் சோலார் விளக்கின் கீழ் புதிதாக கல்வெட்டு வைக்கப்பட்டது அந்த கல்வெட்டில் கம்யூனிஸ்ட் 11 வது வார்டு உறுப்பினர் பெயர் இல்லை.இதனால் காங்கிரஸ் கம்யூனிஸ்ட் தொண்டர்களிடையே மோதல் ஏற்பட்டது. இதனுடைய நித்திரவிளை போலீசாருக்கும் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த அனீஷ் என்பவருக்கும் பிரச்சனை ஏற்படவே போலீசார் அனீஷ் மற்றும் மாவட்ட செயலாளர் செல்லசுவாமியையும் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்தனர்.

Tags

Next Story