காங்கிரஸ், கவுன்சிலர்கள் உள்ளிருப்பு போராட்டம் வாபஸ்
குமரி மாவட்டம் ஏற்றக்கோடு ஊராட்சிக்குட்பட்ட வீயன்னூர் துணை மின் நிலையம் முன்பாக புதிய நிழற்குடை அமைப்பது தொடர்பாக மாவட்ட ஊராட்சி கவுன்சிலர் செல்லின் மேரி தலைமையில் ஏற்றக்கோடு ஊராட்சி அலுவலகத்தில் கவுன்சிலர்கள், காங்கிரசார் போராட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து மூன்று நாட்களாக போராட்டம் நடந்து வந்த நிலையில், நேற்று இரவு திருவட்டாறு வட்டார வளர்ச்சி அலுவலர் யசோதா போராட்டம் நடத்தியவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். அதில் உடன்பாடு ஏற்படாத நிலையில், நேற்று இரவு அமைச்சர் மனோ தங்கராஜ் சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு திட்டத்தில் வீயன்னூர் மின்வாரிய அலுவலகம் அருகில் நிழற்குடை அமைக்கும் பணி ரத்து செய்யுமாறு மாவட்ட கலெக்டருக்கு பரிந்துரை செய்துள்ளார். இதை அடுத்து மாவட்ட கலெக்டரின் ரத்து உத்தரவை வட்டார வளர்ச்சி அலுவலர் போராட்டத்தில் கலந்து கொண்டவர்களிடம் தெரிவித்தார். இதை அடுத்து நேற்று இரவு 10 மணியளவில் உள்ளிருப்பு போராட்டம் நடத்தியவர்கள் போராட்டத்தை முடித்து கொண்டு கலைந்து சென்றனர். இந்த மாதத்தில் மாவட்ட கவுன்சிலர் பரிந்துரையின் பேரில் ஒதுக்கப்பட்ட நிதியில் வேலைகள் நடக்கும் என தெரிவித்தனர்.
Tags
Next Story