திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் காங்கிரஸ் மாவட்ட தலைவர் கோபி பேட்டி

திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் காங்கிரஸ் மாவட்ட தலைவர் கோபி பேட்டி

காங்கிரஸ் மாவட்ட தலைவர் கோபி பேட்டி

ஈவிஎம் இயந்திரத்தை தவிர்த்து பேலட் முறையில் தேர்தலை சந்திக்க பிரதமர் தயாரா என பல்லடத்தில் காங்கிரஸ் மாவட்ட தலைவர் கோபி திருப்பூர் வரும் பிரதமருக்கு சவால் விடுவதாக பேட்டி அளித்தார்.
திருப்பூர் மாவட்டம் பல்லடம் மாதப்பூர் பகுதியில் வருகின்ற 27ஆம் தேதி என் மண் என் மக்கள் யாத்திரை நிறைவு விழா மாநாடு நடைபெற உள்ளது. இதில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொள்ள உள்ளார். அதற்கான பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் பல்லடம் பகுதியில் உள்ள தனியார் விடுதியில் சமீபத்தில் பாஜக நகர்மன்ற உறுப்பினர் ஈஸ்வரி காங்கிரஸ் கட்சியில் இணைந்ததைத் தொடர்ந்து அவரது அறிமுக கூட்டம் நடைபெற்றது. இதில் காங்கிரஸ் கட்சியின் பொதுக்குழு உறுப்பினரும் மாவட்ட தலைவருமான கோபி கலந்து கொண்டிருந்தார். அப்போது செய்தியாளர்களை சந்தித்த அவர் பாஜகவின் தேர்தல் பிரமான பத்திரங்கள் மூலம் பெற்று நிதியை பல்லடத்தில் நடைபெறும் மாநாட்டின் ஆடம்பரம் மூலம் தெரிந்து கொள்ள முடிவதாகவும் , நாடாளுமன்றத்தில் குறி சொல்வது போல 400 தொகுதிகளுக்கும் மேல் வெற்றி பெறுவோம் என முன்கூட்டியே கணித்து சொல்வதாகவும் அதையும் ஊடகங்களும் ஒளிபரப்ப துவங்கி மக்கள் மத்தியில் அதனை பதிவு செய்யும் முயற்சியக்க்கப்பட்டிருப்பதாக குற்றம் சாட்டினார். அதே பிரதமர் மோடி அவர்கள் திருப்பூர் வருகை தர இருப்பதால் அவருக்கு மாநாடு நடைபெறும் இடத்தில் இருந்து சவால் விடுவதாகவும், ஈ வி எம் இயந்திரத்தை தவிர்த்து பேலட் முறையில் தேர்தலை சந்தித்து 50 இடங்களையாவது வெற்றி பெறுவார் ஆனால் அவரை மக்களின் பிரதமராக அகில இந்திய தலைவராக ஏற்றுக் கொள்வதாக பேட்டி அளித்தார். அதே நேரத்தில் பேலட் முறையில் வாக்களிக்கும் முறை கொண்டு வரும் பட்சத்தில் காங்கிரஸ் தலைமையிலான இந்தியா கூட்டணி 450 இடங்களுக்கு மேல் வெற்றிபெறும் எனவும் தெரிவித்தார். ராகுல் காந்தியின் ஆக்கப்பூர்வமான அரசியல் நடவடிக்கைகளால் ஈர்க்கப்பட்டு பல்லடம் நகரமன்ற உறுப்பினர் ஈஸ்வரி காங்கிரஸ் கட்சியில் இணைந்து இருப்பதாகவும் , விஜயதாரணி கட்சியில் கொள்கை பிடிப்பில்லாமல் இருந்ததால் வெளியேறி இருப்பதாகவும் , இதனால் காங்கிரஸ் கட்சிக்கு இழப்பில்லை எனவும் விளவங்காடு தொகுதியில் நடைபெறும் தேர்தலில் மீண்டும் காங்கிரஸ் கட்சி முன்பை விட அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றிபெறும் எனவும் தெரிவித்தார்.

Tags

Read MoreRead Less
Next Story