காங்கிரஸ் நிர்வாகி மர்ம மரணம் - மேலும் ஒரு தனிப்படை அமைப்பு
எஸ்பி சிலம்பரசன்
நெல்லை மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் மரணம் குறித்து விசாரிக்க 8வதாக மேலும் ஒரு தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.
திருநெல்வேலி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து விசாரிக்க 7 தனிப்படைகள் அமைக்கப்பட்டிருந்த நிலையில் மேலும் கூடுதலாக ஒரு தனிப்படை அமைக்கப்பட்டு மொத்தம் 8 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிலம்பரசன் இன்று (மே 6) அறிவித்துள்ளார்.
Next Story