காங்கிரஸ் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்

தர்மபுரி பேருந்து நிலையம் அருகே காங்கிரஸ் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை பங்கேற்றார்.
தருமபுரி மாவட்ட காங்கிரஸ் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் மாவட்ட தலைவர் P. தீர்தாராமன் தலைமையில் நடைபெற்றது இக்கூட்டத்தில் தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை பங்கேற்று சிறப்புறையாற்றினார். இக்கூட்டத்தில் சட்டமன்ற கட்சி தலைவர் ராஜேஷ் சிறுபான்மை மாநில தலைவர் ஆர்ப் தமிழக துணை தலைவர் செல்வம் திருச்சி வேலுசாமி உள்ளிட்ட ஏராளமான காங்கிரஸ் தொண்டர்கள் கலந்துகொண்டனர் மாநிலத் தலைவர் பேசும்போது, தமிழகத்தில் உள்ள கிராமங்கள், வீதிகள், இல்லங்கள் வரை காங்கிரஸ் கட்சியின் கட்டமைப்பையும், ராகுல்காந்தி தரும் செய்தியையும் கட்சியினர் கொண்டு சேர்க்க வேண்டும். 300-க்கும் மேற்பட்ட மக்களவைத் தொகுதிகளுக்கு நடந்து முடிந்திருக்கும் தேர்தலில் பாஜக 100 தொகுதிகளைக் கூட வெல்லாது என தெரிந்து கொண்டதால், மோடி தற்போது இசுலாமியர்களை புகழத் தொடங்கியுள்ளார். அதாவது மோடி சரணடைந்திருக்கிறார். என்ற பேசினார் உடன் கட்சி நிர்வாகிகள் பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.

Tags

Read MoreRead Less
Next Story