சேலத்தில் காங்கிரஸ் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்
ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்ற காங்கிரசார்
சேலம் மேற்கு, தெற்கு மற்றும் வடக்கு சட்ட மன்ற தொகுதிகளுக்கு உட்பட்ட காங்கிரஸ் வாக்குச்சாவடி முகவர்கள் ஆலோசனை கூட்டம், நேற்று மாநகர் மாவட்ட கட்சி அலுவலகத்தில் நடந்தது. மாநகர் மாவட்ட தலைவர் பாஸ்கர் தலைமை வகித்தார்.
கூட்டத்தில் முன்னாள் மாநில தலைவர் கே.வி. தங்கபாலு கலந்து கொண்டு பேசுகையில், 'காங்கிரஸ் கட்சியின் வாக்குசாவடி முகவர்கள் பட்டியல், வரும் 28ம் தேதிக்குள் தயார் செய்ய வேண்டும். ஒரு வாக்குசாவடிக்கு 10 பேர் இருக்க வேண்டும். அந்த பட்டியலில் உள்ளவர்களை அந்தந்த வாக்குச்சாவடிக்கு சென்று ஆய்வு செய்ய உள்ளேன். நாடாளுமன்ற தேர்தலில் கூட்டணி கட்சி நிர்வாகிகளுடன் ஒருங்கிணைந்து பணியாற்ற வேண்டும்.
தமிழகம் மற்றும் புதுவையில் உள்ள 40 தொகுதியிலும் இந்தியா கூட்டணி வெற்றி பெறும். பாஜவை எதிர்த்து கட்சி நிர்வாகிகள் கடுமையாக பணியாற்ற வேண்டும், என்றார். கூட்டத்தில் மாநகர பொருளாளர் ராஜகணபதி, வர்த்தக பிரிவு தலைவர் சுப்பிரமணியம், மேற்கு மாவட்ட தலைவர் ஜெயகுமார், பொது குழு உறுப்பினர் ஷாநவாஸ், துணை மேயர் சாரதாதேவி, மாநில துணை தலைவர் விஜயஆனந்த், மாநகர பொது செயலாளர் கோபி குமரன், வெங்கட்ராஜ், நிர்வாகிகள் சிவகுமார், சாந்தமூர்த்தி, நிசார், ராமன், விஜயராஜ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.