அவசர நிலை பிரகடனம் குறித்து இளைஞர்கள் தெரிந்து கொள்ளவேண்டும்-கனகசபாபதி!

அவசர நிலை பிரகடனம் குறித்து   இளைஞர்கள் தெரிந்து கொள்ளவேண்டும்-கனகசபாபதி!

அவசர பிரகடனம்

காங்கிரஸ் கட்சி அரசியல் அமைப்பு சட்டத்தை மதிக்கவில்லை என கனகசபாபதி குற்றச்சாட்டு வைத்துள்ளார்.

கோவை சித்தாபுதூர் பகுதியில் உள்ள பாஜக மாவட்ட அலுவலகத்தில் அவசர நிலை பிரகடனம் பற்றிய கருத்தரங்கம் நடைபெற்றது. இதில் பாஜக மாநில துணைத் தலைவர் கனகசபாபதி கலந்து கொண்டு அவசர நிலை பிரகடனம் பற்றியும் அப்போதைய சூழல் எப்படி இருந்து எனவும் பாஜக தொண்டர்களிடம் எடுத்துரைத்தார்.

அப்போது பேசிய அவர், "காங்கிரஸ் கட்சி ஒரு குடும்ப கட்சி எனவும் அவர்கள் அரசியலமைப்பு சட்டத்தை மதிக்கவில்லை எனவும் குற்றம் சாட்டினார். இந்திரா காந்தி முழு அதிகாரத்தையும் எடுத்துக் கொண்டதாகவும் தனக்கு வேண்டியவர்களை மட்டுமே நீதிமன்றம் உள்ளிட்ட அரசாங்க பொறுப்புகளில் அமர்த்தியதாக தெரிவித்தார்.

ஆட்சி மற்றும் கட்சி என அனைத்தையும் இந்திராகாந்தி தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்ததாகவும் அப்போது இந்திரா காந்தியின் மீது போடப்பட்ட வழக்கில் இந்திரா காந்திக்கு எதிராக தீர்ப்பு வந்ததாகவும் அது இந்திராகாந்திக்கு பிடிக்காமல் போனதாக தெரிவித்தார். மேலும் அவசர நிலை பிரகடனம் என்பது அமைச்சர்களுக்கு அடுத்த நாள் பத்திரிகைகளில் வந்த செய்தியை பார்த்த பின்பு தான் தெரிய வந்தது எனவும் அவசர நிலை இருந்தபோது தனிமனித உரிமை என யாரும் நீதிமன்றத்திற்கு கூட செல்ல முடியாது. அப்போது எதிர்க்கட்சிகள் உட்பட ஒரு லட்சத்து முப்பது பேர் கைது செய்யப்பட்டார்கள் என தெரிவித்தார்.

Tags

Next Story