காங்கிரஸ் தலைவர் செல்வபெருந்தகை நாளை குமரி வருகை

காங்கிரஸ் தலைவர் செல்வபெருந்தகை நாளை குமரி வருகை

செல்வ பெருந்தகை

தேர்தல் பரப்புரைக்காக நாளை தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வபெருந்தகை கன்னியாகுமரி வரவுள்ளார்.
கன்னியாகுமரி பாராளுமன்ற தேர்தல் களம் தற்போது மிகவும் பரபரப்பாகி உள்ளது. பாதிய ஜனதா, காங்கிரஸ், அதிமுக , நாம் தமிழர் கட்சி என 4 முனை போட்டி நடைபெறும் இந்த தொகுதியில் அனைத்து கட்சியை சேர்ந்த தலைவர்கள் பிரச்சாரம் செய்து வருகின்றனர். இந்த நிலையில் நாளை (07-04-2024) மாலை 6 மணிக்கு தமிழ் நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கு.செல்வபெருந்தகை எம் எல் ஏ குமரி பாராளுமன்ற காங்கிரஸ் வேட்பாளர் விஜய் வசந்த் - ஐ ஆதரித்து தேர்தல் பரப்புரை செய்ய நாகர்கோவில் வருகிறார். அண்ணா ஸ்டேடியம் அருகே நடைபெறும் பொது கூட்டத்தில் பேசுவதாக நாகர்கோவில் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி அறிவித்துள்ளது.

Tags

Next Story