பாஜக அரசை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் பெரம்பலூரில் ஆர்ப்பாட்டம்

பாஜக அரசை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் பெரம்பலூரில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்
பாஜக அரசை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் பெரம்பலூரில் ஆர்ப்பாட்டம் . அசாம் மாநிலத்தில் நடைபெற்ற பாரத்ஜோடோ யாத்திரையில் ராகுல் காந்தி பயணம் மேற்கொண்ட பேருந்தை வழிமறித்து தாக்குதல் நடத்திய அசாம் பாஜக அரசையும் பாஜகவையும் கண்டித்து, பெரம்பலூர் மாவட்ட காங்கிரஸ் சார்பில் பெரம்பலூர் பழைய பேருந்து நிலையம் பகுதியில் மாவட்ட காங்கிரஸ் கட்சி துணைத் தலைவர் ஆசைத்தம்பி தலைமையில், வழக்கறிஞர் பிரிவு தலைவர் ரஞ்சித்குமார் முன்னிலையில் ஆர்பாட்டம் நடைபெற்றது, இதில் பாஜக அரசு கண்டித்து கண்டன கோசமிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதில் மாவட்ட துணைத் தலைவர்கள் அருணாச்சலம், செல்வம், பன்னீர்செல்வம், பொருளாளர் மனோகரன், வட்டாரத் தலைவர்கள் ஆலத்தூர் பாக்யராஜ், செந்துறை செந்தில்குமார் , சுப்பிரமணியம் நகரத் தலைவர் ராஜா , இளைஞர் காங்கிரஸ் துணைத் தலைவர் பாலமுருகன், மகிளா காங்கிரஸ் தலைவர் இந்திராணி, வட்டாரத் தலைவி சந்திரா, வழக்கறிஞர் பிரிவு துணைத் தலைவர் சரத்குமார், உள்ளிட்ட பொறுப்பாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.
