காவல் நிலையத்தில் எம்.எல்.ஏ தலைமையில் குவிந்த காங்கிரசார்

காவல் நிலையத்தில் எம்.எல்.ஏ  தலைமையில் குவிந்த காங்கிரசார்

வழக்குப்பதிவு செய்ய கோரி குவிந்த காங்கிரஸ் கட்சியினர் 

கொல்லங்கோடு அருகே உள்ள அடைக்காக்குழி ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் அட்டகுளம் என்ற பாசன குளம் உள்ளது. இந்த குளத்தை சுற்றி ஏராளமான விவசாயிகள் விவசாயம் செய்து வருகின்றனர். இந்த நிலையில் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன் குளத்தை தூர்வாரி, பக்க சுவர் கட்டும் பணி நடந்தது. அப்போது குளத்திற்குள் மண்ணைக் கொட்டி சென்றதாக விவசாயிகள் அதற்கு தெரிவித்து வந்தனர். இதற்கு இடையே அப்பகுதியை சேர்ந்த ஒருவர் குளத்தில் தேங்கிய தண்ணீரை ஊராட்சி அனுமதி இன்றி திறந்து விட்டார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஊராட்சித் தலைவர் ஜெயராணி என்பவர் கொல்லங்கோடு போலீசில் புகார் அளித்தார். அந்த புகார் தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்யாமல் காலம் கடத்தி வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் போலீசார் வழக்குப் பதிவு செய்யாததை கண்டித்து ராஜேஷ் குமார் எம்எல்ஏ தலைமையில் காங்கிரஸ் கட்சியினர் நேற்று மாலையில் போலீஸ் நிலையத்தில் திரண்டனர். அவர்கள் இன்ஸ்பெக்டரிடம் பேச்சுவார்த்தை நடத்தி, வழக்கு பதிவு செய்ய கேட்டுக் கொண்டனர். அப்போது இது தொடர்பாக விசாரணை நடத்தி, வழக்கு பதிவு செய்வதாக போலீசார் கூறினார். இதை அடுத்து காங்கிரஸ் கட்சியினர் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

Tags

Next Story