வாணியம்பாடி பேருந்து நிலையம் அருகே காங்கிரஸ் கட்சியினர் சாலை மறியல்

வாணியம்பாடி பேருந்து நிலையம் அருகே காங்கிரஸ் கட்சியினர் சாலை மறியல்

சாலை மறியல்

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி பேருந்து நிலையம் அருகே காங்கிரஸ் கட்சியினர் சாலை மறியல்.. கைகளில் கருப்பு கொடி ஏந்தி கோ பேக் மோடி என கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 50க்கும் மேற்பட்டோர் கைது!
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி பேருந்து நிலையம் அருகே திருப்பத்தூர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி மாவட்ட தலைவர் பிரபு தலைமையில் 50க்கும் மேற்பட்டோர் சாலை மறியலில் ஈடுபட்டனர். கைகளில் கருப்பு கொடி ஏந்தி கோ பேக் மோடி எனவும், தமிழக மீனவர்களை இலங்கை அரசு கைது செய்துள்ளவர்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என மத்திய அரசுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பி மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்ட 50க்கும் மேற்பட்டோரை நகர போலீசார் கைது செய்து தனியார் திருமண மண்டபத்திற்கு அழைத்துச் சென்றனர் இச்சம்பவத்தால் வாணியம்பாடி பேருந்து நிலையத்தில் அரை மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Tags

Next Story