சுட்டெரிக்கும் வெயிலில் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் வாக்கு சேகரிப்பு !

சுட்டெரிக்கும் வெயிலில் காங்கிரஸ் கட்சி வேட்பாளர்  வாக்கு சேகரிப்பு !

காங்கிரஸ் கட்சி வேட்பாளர் 

மயிலாடுதுறையில் இந்தியா கூட்டணி சார்பாக மயிலாடுதுறை பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் சுதாவை ஆதரித்து மயிலாடுதுறை மாவட்ட செயலாளர் நிவேதா முருகன் கை சின்னத்திற்கு வாக்கு கேட்டு பரப்புரையில் ஈடுபட்டார்.

மயிலாடுதுறை மாவட்டம் செம்பை வடக்கு ஒன்றியதுக்கு உட்பட்ட கஞ்சாநகரம், மேலையூர், கருவாழக்கரை, கீழையூர் முடிகண்டநல்லூர் உள்ளிட்ட 20 க்கும் மேற்பட்ட கிராமங்களில் இந்தியா கூட்டணி சார்பாக காங்கிரஸ்கட்சி வேட்பாளர் சுதாவை ஆதரித்து மயிலாடுதுறை மாவட்ட செயலாளர் நிவேதா எம் முருகன் எம் எல் ஏ பரப்புரையில் ஈடுபட்டார்.

செம்பனார்கோவில் வடக்கு ஒன்றிய செயலாளர் அன்பழகன் தலைமையில் நடைபெற்ற வாக்கு சேகரிக்கும் பரப்புரையில் மயிலாடுதுறை நாடாளுமன்ற உறுப்பினர் ராமலிங்கம் மயிலாடுதுறை சட்டமன்ற உறுப்பினர் ராஜ்குமார், தஞ்சை மண்டல தகவல் தொழில் நுட்ப அணி பொறுப்பாளர் ஸ்ரீதர் , மாவட்டத் துணைச் செயலாளர் ஞானவேலன் மற்றும் கூட்டணி கட்சி சார்ந்த நிர்வாகிகள் தொண்டர்கள் ஏராளமானோர் பரப்புரையில் ஈடுபட்டனர்.

அப்போது பாராளுமன்ற வேட்பாளர் சுதா பேசுகையில் ராகுல் காந்தி ஆசியோடு தமிழக முதலமைச்சர் ஆசியுடன் மயிலாடுதுறை பாராளுமன்றத்தில் போட்டியிடுகிறேன் வெற்றி பெற்றால் மகளிருக்கு வருடத்திற்கு ஒரு லட்ச ரூபாய் வங்கி கணக்கில் செலுத்தப்படும் எனவும் 100 நாள் வேலை திட்டத்தை நகர்ப்புறத்துக்கும் விரிவாக்குவோம் எனவும் 100 நாள் வேலை திட்டத்தில் அதிகப்படியாக 400 ரூபாய் கொண்டு வருவோம் எனவும் பேசி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

அவருக்கு வழி நெடுவிலும் சால்வை அணிவித்து ஆரத்தி எடுத்தும் பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். இதனிடையே இந்திய கூட்டணி கட்சிகளின் சார்பில் கீழையூர் மற்றும் திருச்சம்பள்ளி பகுதியில் அமைக்கப்பட்டிருந்த தேர்தல் பணிமனையை பாராளுமன்ற வேட்பாளர் சுதா ரிப்பன் கத்தரித்து திறந்து வைத்தார்.

Tags

Next Story