சிவகாசி அருகே காங்கிரஸ் கட்சியினர் தேர்தல் பிரச்சாரம்....

சிவகாசி அருகே காங்கிரஸ் கட்சியினர் தேர்தல் பிரச்சாரம்....

வாக்கு சேகரிப்பு


சிவகாசி அருகே திருத்தங்கல் பகுதியில் தெரு,தெருவாக காங்கிரஸ் கட்சியினர் தேர்தல் பிரச்சாரம்....
விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகே திருத்தங்கல் பகுதியில்,நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற உள்ளதை ஒட்டி பல்வேறு அரசியல் கட்சியினர் தீவிர பரப்புரை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில் விருதுநகர் நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட சிவகாசி பகுதிகளில் இண்டியா கூட்டணியின் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் மாணிக்கம்தாகூரை ஆதரித்து திருத்தங்கல் 1வது வார்டு முத்துமாரி நகர் பகுதியில் மாமன்ற உறுப்பினரும்,பகுதி கழக செயலாளர் அ.செல்வம் மற்றும் சிவகாசி சட்டமன்ற உறுப்பினர் அசோகன், முன்னாள் நகர்மன்றத் துணைத் தலைவர் பொன்சக்திவேல் ஆகியோர் தலைமையில் வீடு வீடாக சென்று திமுக ஆட்சியின் சாதனைகளை கூறியும்,மோடி அரசை அகற்ற கூறியும் துண்டு நோட்டீஸ் வழங்கி கை சின்னத்திற்கு வாக்கு சேகரித்து பரப்புரை மேற்கொண்டார். இந்நிகழ்ச்சியில் திமுகாவை சேர்ந்த பல்வேறு அணியை சேர்ந்த ஆண்,பெண் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Tags

Read MoreRead Less
Next Story