காங்கிரஸ் கட்சி நிறுவன நாள் விழா

காங்கிரஸ் கட்சி நிறுவன நாள் விழா
X

கொடியேற்றம் 

சங்ககிரியில் காங்கிரஸ் கட்சியின் 139வது நிறுவன நாளையொட்டி சேலம் மேற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சியினர் கட்சி கொடியை ஏற்றி, பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கி கொண்டாடினர்.

காங்கிரஸ் கட்சியின் 139து நிறுவன நாளையொட்டி சேலம் மேற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி தலைவர் ஜெய்க்குமார் தலைமையில் நிர்வாகிகள் சங்ககிரி-பவானி பிரதான சாலையில் உள்ள கிராம நிர்வாக அலுவலர்கள் சங்க கட்டிடம் அருகே கட்சி கொடியை ஏற்றி வைத்து பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கி கொண்டாடினர். வட்டாரத் தலைவர் சரவணன், நகரத் தலைவர் ரவி ஆகியோர் முன்னிலையில் நடைபெற்ற இந்நிகழ்வில் சங்ககிரி ஊராட்சி ஒன்றியக்குழு முன்னாள் துணைத் தலைவர் .மணி, மாவட்ட பொது செயலாளர்கள் காசிலிங்கம், நடராஜன், ராமமூர்த்தி, சின்னசாமி, மாணவர் காங்கிரஸ் மாநில ஒருங்கிணைப்பாளர் அகில், நிர்வாகிகள் அங்கமுத்து, லோகநாதன், ஆறுமுகம், இலக்கிய அணி செங்கோட்டுவேலு, குமார், விஸ்வநாதன், கிரி, ஆறுமுகம், முருகேசன், வெங்கடேஷ், பழனி, மாணவர் காங்கிரஸ் வெஸ்லி, ரியாஸ் உள்ளிட்ட பலர் இதில் கலந்து கொண்டனர்.

Tags

Next Story