விருதுநகரில் மீண்டும் களம் காணும் காங்கிரஸ்

2024 ஆம் ஆண்டு நாடாளுமன்ற பொதுத் தேர்தலில் விருதுநகர் தொகுதியில் மீண்டும் காங்கிரஸ் கட்சி போட்டியிடுகிறது. கடந்த 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற பொது தேர்தலில் போட்டியிட்ட காங்கிரஸ் கட்சியைச் சார்ந்த மாணிக்கம் தாகூர் வெற்றி பெற்ற நாடாளுமன்ற உறுப்பினராக இருந்து வந்த நிலையில் 2024 ஆம் ஆண்டுக்கான நாடாளுமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நிலையில் வரும் ஏப்ரல் 19ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.
தமிழகத்தில் திமுக தலைமையிலான கூட்டணியும் அதிமுக கூட்டணி பாஜக கூட்டணி மற்றும் நாம் தமிழர் என நான்கு முனை போட்டியில் நிலவிவரும் நிலையில், இன்று திமுக தலைமையிலான கூட்டணியில் இடம் பெற்றுள்ள காங்கிரஸ் கட்சிக்கு மீண்டும் விருதுநகர் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அதுமட்டுமின்றி விருதுநகர் புதுச்சேரி கரூர் உள்ளிட்ட 10 நாடாளுமன்ற தொகுதியை திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சி போட்டியிடும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. விருதுநகர் நாடாளுமன்ற உறுப்பினராக உள்ள மாணிக்கம் தாகூர் மீண்டும் விருதுநகர் தொகுதியில் போட்டியிட அதிக வாய்ப்பு உள்ளது.
