காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
தமிழக ஆளுநரை கண்டித்து சேலம் காங்கிரஸார் ஆர்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.
சேலம் கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் தமிழக கவர்னர் ஆர். என். ரவியை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் ஆத்தூர் உடையார்பாளையத்தில் உள்ள காந்தி சிலை முன்பு நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு சேலம் கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி தலைவர் எஸ். கே.அர்த்தனாரி தலைமை தாங்கினார்.
ஆத்தூர் நகர தலைவர் முருகேசன், மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் சக்கரவர்த்தி, கனகராஜ், தங்க ராஜ், மணிமுருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.ஆர்ப்பாட்டத்தில் தேசிய காங்கிரசை வழிநடத்தியவர் மகாத்மா காந்தி. அவரது விடுதலை போராட்ட பங்களிப்பை கொச்சைப்படுத்துகிற வகையில்,அரசியல் காழ்ப்புணர்ச்சியோடு தமிழக கவர்னர் ஆர். என். ரவி கருத்து கூறியிருப்பதை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர்.
Next Story