பாஜக அரசை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
காங்கிரஸ் கட்சியின் வங்கி கணக்குகளை முடக்கம் செய்த அமலாக்கத்துறை மற்றும் மத்தியில் ஆளும் பாஜக அரசை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
காங்கிரஸ் கட்சியின் வங்கி கணக்குகளை முடக்கம் செய்த அமலாக்கத்துறை மற்றும் மத்தியில் ஆளும் பாஜக அரசை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம். எலக்ட்ரோலர் பாண்ட் வழக்கில் உச்சநீதிமன்ற 5 பெஞ்ச் வெளிப்படை தன்மை இல்லாததால், முறைகேடுகளுக்கு வழிவகுக்கும் எனக் கூறி அரசியல் கட்சியினர் வாங்கும் எலக்ட்ரோலர் பாண்ட், தடை செய்து உத்தரவிட்டது. இந்த நிலையில் பிரதான எதிர்க்கட்சியான காங்கிரஸ் கட்சியின் வங்கி கணக்குகளை அமலாக்க துறையினர் திடீரென முடக்கம் செய்து உத்தரவிட்டது. இந்த முடக்கத்தை எதிர்த்து காங்கிரஸ் கட்சியினர் மேல் முறையீடு செய்யப்பட்டு பின்னர் வங்கி கணக்குகள் முடக்கத்திலிருந்து விடுவிக்கப்பட்டது.
இப்ப பிரச்சனையில் மத்தியில் ஆளும் பாஜக அரசு எதிர்க்கட்சிகளை முடக்கும் நோக்கோடு அமலாக்கத் துறையை பயன்படுத்தி வருவதாக கூறி இந்தியா முழுவதிலும் உள்ள எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு குரல் எழுப்பி வருகின்றனர். இந்த நிலையில் தேனி மாவட்டம் பெரியகுளம் வடகரை கனரா வங்கி முன்பாக காங்கிரஸ் கட்சியினர் மத்தியிலாலும் பாஜக அரசை கண்டித்தும், ஆளுங்கட்சிக்கு துணை போகும் அமலாக்க துறையை கண்டித்தும், கண்டன கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலும் மத்தியிலாலும் பாஜக அரசு 2014 இல் தேர்தலில் அறிக்கையில் குறிப்பிட்ட பெட்ரோல் டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலை ஏன் இன்னும் கட்டுக்குள் கொண்டு வரவில்லை, அதானிக்கும் அம்பானிக்கும் துணை போகும் மத்திய அரசு எனக் கூறி கோஷமிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த நிர்வாகிகள் 50க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.