போளூரில் மத்திய அரசை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
ஆர்ப்பாட்டம்
திருவண்ணாமலைமாவட்டம் போளூர் பேருந்து நிலையம் அருகே மத்திய பாஜக அரசை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரியின் அறிவுறுத்தலின் படி மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்திற்கு முறையாக நிதி ஒதுக்காத மத்திய பாஜக அரசைக் கண்டித்து போளூர் பேருந்து நிலையம் அருகே உள்ள அரசுடமையாக்கப்பட்ட வங்கி வாயிலில் காங்கிரஸ் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு மாநில பொது குழு உறுப்பினர் ஆசைத்தம்பி தலைமை தாங்கினார். மாநில பொதுக்குழு உறுப்பினர் முனிரத்தினம் முன்னிலை வகித்தார். மாவட்ட துணைத்தலைவர் கிருஷ்ணமூர்த்தி தலைமை உரை நிகழ்த்தினார். மேலும் ஆர்ப்பாட்டத்தில் நகர தலைவர் யுவராஜ், வட்டாரத் தலைவர் ஏழுமலை, வட்டார தலைவர் மணவாளன், மாவட்ட விவசாயஅணி தலைவர் சுரேஷ், ஜெயவேல், ரவி, தங்கவேல், மணி, மார்க்கண்டேயன், தியாகராஜன் உள்ளிட்ட காங்கிரஸ் நிர்வாகிகளும் தொண்டர்களும் கலந்து கொண்டு கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
Next Story