மத்திய அரசைக் கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்.

மத்திய அரசைக் கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்.

ஆர்ப்பாட்டம் 

மத்திய பாஜக அரசைக் கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

எதிர் கட்சிகளின் வங்கி கணக்குகளுக்கு சட்டத்துக்கு புறம்பாக அபராதம் விதிக்கும் வருமான வரித் துறையும், மத்திய அரசையும் கண்டித்து, அரியலூர் பேருந்து நிலையம் அருகேயுள்ள காமராஜர் சிலை முன்பு காங்கிரஸ் கட்சியினர் சனிக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆர்ப்பாட்டத்துக்கு, அக்கட்சியின் மாவட்டத் தலைவர் ஆ.சங்கர் தலைமை வகித்து கண்டன உறையாற்றினார். மூத்த காங்கிரஸ் தலைவர் சீனி.பாலகிருஷ்ணன் ஆர்ப்பாட்டத்தை தொடக்கி வைத்து பேசினார். ஆர்ப்பாட்டத்தில்,மாவட்ட பொருளாளர் மனோகரன், வட்டாரத் தலைவர்கள், கர்ணணன் பாலகிருஷ்ணன், திருநாவுக்கரசு, சக்திவேல், கங்காதுரை, அழகானந்தம், மாவட்ட மகளிர் அணித் தலைவி மாரியம்மாள், மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் புகழ்ராஜ், ஜெயங்கொண்டம் நகர காங்கிரஸ் தலைவர் அறிவழகன், சிறுபான்மை பிரிவு மாவட்டத் தலைவர் நிக்கோலஸ் உள்ளிட்டோர் கலந்து கொண்டு முழக்கமிட்டனர். :

Tags

Next Story