ஆளுநரை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

மகாத்மா காந்தி குறித்து சர்ச்சையான கருத்துக்களை தெரிவித்த தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை கண்டித்து விருதுநகரில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்தியா முழுவதும் கடந்த 23ம் தேதி நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் 127 வது பிறந்ததினம் சிறப்பாக கொண்டாடப்பட்டது. அதனையொட்டி சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி அவர்கள் மாணவர்களிடையே உரையாற்றும் பொழுது சுதந்திர போராட்டத்தின் போது இந்தியாவிலிருந்து ஆங்கிலேயர்கள் வெளியேற காந்திஜி எடுத்த ஒத்துழையாமை இயக்கம் பலனைக்கவில்லையெனவும், இந்திய தேசிய ராணுவமே இந்த புரட்சிக்க்கு வித்திட்டதாகவும், ஆகையால் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் தான் இந்திய சுதந்திர போராட்டத்திற்கு காரணமாக இருந்தார் என்றும், ஆகையால் நம் நாட்டின் தேசத்தந்தை நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் தான் என்று சர்ச்சையான கருத்தை மாணவ, மாணவிகளிடையே சர்ச்சையான கருத்தை பதிவு செய்த தமிழக ஆளுநர் ஆர். என். ரவியை கண்டித்து விருதுநகர் பழைய பேருந்து நிலையம் முன்பு நகர காங்கிரஸ் கமிட்டி சார்பாக 50 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு தமிழக ஆளுநர் ஆர். என் . ரவிக்கு எதிராக கண்டன முழக்கங்களை எழுப்பி ஆர்பார்ட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் இந்த ஆர்ப்பாட்டத்தில் மாணவர் காங்கிரஸ், இளைஞர் காங்கிரஸ் , நகர்மன்ற உறுப்பினர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story