கள்ளக்குறிச்சியில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம் !

கள்ளக்குறிச்சியில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம் !

ஆர்ப்பாட்டம் 

பா.ஜ.க, வெற்றி பெற்றால் இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தை மாற்றியமைப்போம் என, கூறிய பா.ஜ.க, எம்பி அனந்தகுமார் ஹக்டேவை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடந்தது.
கள்ளக்குறிச்சி மாவட்ட காங்., எஸ்.சி., பிரிவு சார்பில், வரும் லோக்சபா தேர்தலில் 400 இடங்களில் பா.ஜ.க, வெற்றி பெற்றால் இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தை மாற்றியமைப்போம் என, கூறிய பா.ஜ.க, எம்பி அனந்தகுமார் ஹக்டேவை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடந்தது. கச்சேரி சாலையில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு, எஸ்சி, பிரிவு மாவட்ட தலைவர் பெரியசாமி தலைமை தாங்கினார். மாநில துணைத் தலைவர் சீனிவாசன், துணைத் தலைவர் சிவக்குமார், பொதுச் செயலாளர் பழனிவேல், துணை தலைவர் செல்வராஜி முன்னிலை வகித்தனர். முன்னாள் மாவட்ட தலைவர் இளையராஜா, மாநில பொதுக்குழு உறுப்பினர் இளவரசன், நகர தலைவர் குமார் ஆகியோர் பேசினர். நிர்வாகி ராஜ்குமார் நன்றி கூறினார்.

Tags

Next Story