காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் செல்வப் பெருந்தகை பேட்டி !
செல்வப் பெருந்தகை
பாஜக ஆட்சிக்கு நாட்கள் என்னப்படுகின்றன, கற்பனையின் அடிப்படையில் அண்ணாமலை பேசி வருகிறார், அநாகரிக அரசியல் பேசி வருவதை பாஜக தலைவர்கள் கைவிட வேண்டும் , பெரம்பலூரில் காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் செல்வப் பெருந்தகை பேட்டி. பெரம்பலூர் புதிய பேருந்து நிலையம் பகுதியில் உள்ள தனியார் அரங்கில் காங்கிரஸ் கட்சியின் செயற்குழு கூட்டம் மாவட்டத் தலைவர் சுரேஷ் தலைமையில் நடைபெற்றது.
இதில் மாநில தலைவர் செல்வப் பெருந்தகை, மற்றும் அமைப்புச் செயலாளர் ராம் மோகன், பொதுச் செயலாளர் செல்வம், மாநில துணை தலைவர் ராஜேந்திரன், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் ராஜேஷ் குமார், உள்ளிட்ட மாநில நிர்வாகிகள் பலர் கலந்து கொண்ட கூட்டத்தில், மாநிலத் தலைவர் செல்வப் பெருந்தகை பேசுகையில், காமராஜர் ஆட்சி காலத்தில் இருந்த ஓட்டு விகிதத்தை, தற்போது காங்கிரஸ் கட்சியில் கொண்டு வர வேண்டும் அதற்காக நிர்வாகிகள் உறுப்பினர்கள் கண்டிப்பாக உழைத்து வாக்கு வங்கியை அதிகரிக்க பாடுபட வேண்டும், என தெரிவித்தார்.
இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து அவர் தெரிவிக்கும்போது, தமிழகத்துக்கு நீட் தேர்வு கூடாது என்று சட்டப்பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் முதல் தீர்மானம் நிறைவேற்றி, சங்கல்ப இயக்கமும், பா.ஜ.க.வும் ஒப்பந்தத்தின் அடிப்படையில் நீட் தேர்வை இங்கு கொண்டு வந்தன. இதற்கும் காங்கிரசுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை, நாங்களும் எதிர்க்கிறோம். என தெரிவித்தவர், அண்ணாமலை கற்பனையின் அடிப்படையில் பேசி வருகிறார், ED - CBI யை வைத்து அனைவரையும் மிரட்டி விடலாம் என நினைக்கிறார், ED யில் கைது செய்யப்பட்டவர்கள் தற்பொழுது வெளியே வந்து கொண்டிருக்கின்றனர்.
அவர்கள் அமைதியாக இருக்க மாட்டார்கள் மீண்டும் பொதுவாழ்வில் ஈடுபடுவார்கள், அப்போது அண்ணாமலைக்கு இது பற்றி தெரியும் என தெரிவித்தார், தொடர்ந்து பேசியவர் இந்தியாவில் உண்மையற்ற நேர்மையற்ற அரசியலை பாஜக செய்து வருகிறது, தற்போது கூட்டணியில் உள்ள சந்திரபாபு நாயுடு டெல்லிக்கு சென்றுள்ளார், பாஜக ஆட்சிக்கு நாட்கள் என்ன படுகின்றன என தெரிவித்தவர், அநாகரிக அரசியல் பேசுவதை பாஜக தலைவர்கள் கைவிட வேண்டும் என தெரிவித்தார். இந்த நிகழ்ச்சியின் போது மாநில, மாவட்ட, வட்டார நிர்வாகிகள் உறுப்பினர்கள் திரளாக கலந்து கொண்டனர்.