பாஜக அரசை கண்டித்து காங்கிரசார் ஆர்ப்பாட்டம்

பாஜக அரசை கண்டித்து  காங்கிரசார் ஆர்ப்பாட்டம்

ஆர்ப்பாட்டம் 

காங்கிரஸ் முத்த தலைவர் ராகுல் காந்தியின் மக்கள் நீதி பயணத்திற்கு அச்சுறுத்தல்களையும், தடைகளையும் செய்யும் அசாம் மாநில பாஜக அரசை கண்டித்து திருச்செங்கோட்டில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
நீதி பயணம் செய்து வரும் காங்கிரஸ் கட்சியினுடைய மூத்த தலைவர் ராகுல் காந்தியை அச்சுறுத்தியும் தடைகளையும் தடை விதித்தும் வருகின்ற பாஜக அரசை கண்டித்து நாமக்கல் மேற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பாக திருச்செங்கோட்டில் நேற்று மாலை 5 மணி அளவில் கண்டன ஆர்ப்பாட்டம் மாவட்ட தலைவர் சர்வேயர் செல்வகுமார் தலைமையில் நடைபெற்றது. இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட பொருளாளர் பொன்னுசாமி நகர தலைவர்கள் பாலதண்டாயுதம் ஜானகிராமன் ராஜேந்திரன் ராஜா ஹரி மணியன் வட்டாரத் தலைவர்கள் ராஜா ,சுரேஷ், கார்த்தி, அறம் வளர்த்தார் பழனிச்சாமி, மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் நடராஜன் ஜெகநாதன் மாவட்ட துணை தலைவர் கிருஷ்ணன் சக்திவேல் மாவட்ட பொது செயலாளர் கோவிந்தன் நடராஜன் கோபாலகிருஷ்ணன் சந்திரன் சிங்காரவேல் வட்டாரத் துணைத் தலைவர் செங்கோட்டையன் பிரபாகரன் குணசேகரன் நடராஜ் சிவாஜி மன்ற தலைவர் சிவாஜி சேகர் இளைஞர் காங்கிரஸ் தலைவர் தினேஷ் மற்றும் பலர் கலந்து கொண்டு மத்திய பாஜக அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது

Tags

Next Story