பாஜக அரசை கண்டித்து காங்கிரஸார் ஆர்ப்பாட்டம்
ஆர்ப்பாட்டம்
ஈரோடு மூலப்பாளையம் அருகே மத்திய பாஜக அரசை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஈரோடு தெற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டியின் சார்பில் மாவட்ட தலைவர் மக்கள் ஜி ராஜன் தலைமையில் மூலப்பாளையம் அருகில் மத்தியில் ஆட்சி செய்யும் பிஜேபி அரசின் மக்கள் விரோத போக்கை கண்டித்தும், விவசாயிகளை வஞ்சித்துக் கொண்டிருக்க கூடிய அரசை கண்டித்தும், பிஜேபி அரசின் கைப்பாவையாக இருக்கும் வருமானவரித் துறையை வைத்து காங்கிரஸ் கட்சியின் வங்கி கணக்கை முடக்கி சர்வாதிகாரப் போக்கை நிகழ்த்திக் கொண்டிருக்கும் மோடி அரசை கண்டித்து கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தின் மூலம் விவசாயிகளை வஞ்சிக்கும் பிஜேபி அரசு உடனடியாக விவசாயிகளை அழைத்து சுமூகமான தீர்வை எடுக்க வேண்டும் எனவும் கண்டன கோஷம் எழுப்பப்பட்டது.
Next Story