பாஜக அரசை கண்டித்து காங்கிரசார் ஆர்ப்பாட்டம்
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட காங்கிரசார்
இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் வங்கி கணக்கிலிருந்து அனுமதி இன்றி 135 கோடி எடுத்ததோடு 1823 கோடி ரூபாய் வருமான வரி கட்ட வேண்டுமென
வருமான வரி துறையை கைப்பாயாக பயன்படுத்தி காங்கிரஸ் கட்சியை மிரட்டும் ஒன்றிய பாஜக அரசு கண்டித்து நாமக்கல் மேற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் பழைய பேருந்து நிலையம் அண்ணா சிலை அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
நாமக்கல் மேற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி தலைவர் செல்வகுமார் தலைமை வகித்தார், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட குழு உறுப்பினர் ஜெயராமன் மாவட்ட செயலாளர் கணேசன் ஆதித்தமிழர் பேரவை துணை பொதுச்செயலாளர் செல்வ வில்லாளன்விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலாளர் முருகன்
காங்கிரஸ் கட்சியின் நாமக்கல் மாவட்ட பொருளாளர் பொன்னுசாமிஉள்ளிட்ட காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள்கூட்டணி கட்சி நிர்வாகிகள் என பலரும் கலந்து கொண்டனர்