மத்திய அரசை கண்டித்து 5 இடங்களில் காங்கிரசார் ஆர்ப்பாட்டம்

மத்திய அரசை கண்டித்து 5 இடங்களில் காங்கிரசார் ஆர்ப்பாட்டம்
X
திருவட்டார் போஸ்ட் ஆபீஸ் முன்பு நடந்த ஆர்ப்பாட்டம்
காங்கிரஸ் கட்சியின் வங்கி கணக்குகளை முடக்க முயற்சித்த மத்திய அரசை கண்டித்து குமரி மாவட்டத்தில் 5 இடங்களில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கன்னியாகுமரி மேற்கு மாவட்ட காங்கிரஸ் சார்பில், கட்சியின் வங்கி கணக்குகளையும் முடக்க முயற்சித்த ஒன்றிய அரசை கண்டித்து குழித்துறை, தக்கலை, புதுக்கடை, திருவட்டார், குலசேகரம் ஆகிய ஐந்து இடங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. குழித்துறை சந்திப்பில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு கட்சியின் காங்கிரஸ் நகர காங்கிரஸ் தலைவர் வக்கீல் சுரேஷ் தலைமை வைத்தார். மாவட்ட காங்கிரஸ் தலைவர் டாக்டர் பினுலால் சிங் போராட்டத்தை விளக்கி பேசினார்.

புதுக்கடை சந்திப்பில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட துணை தலைவர் கோபன் தலைமை வகித்தார். வட்டார தலைவர்கள் ராஜசேகரன், ரகுபதி, விஜயகுமார், பொதுச் செயலாளர் ஆஸ்கர் பிரடி உட்பட காங்கிரஸ் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

திருவட்டார் கிழக்கு வட்டார காங்கிரஸ் கட்சி சார்பில் திருவட்டார் தபால் நிலையம் சந்திப்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு வட்டார தலைவர் ஜெபா தலைமை வகித்தார். இதை போன்று குலசேகரம் கனரா வங்கி முன் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் குலசேகரம் பேரூராட்சி தலைவர் ஜெயந்தி ஜேம்ஸ் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story