காங்கிரஸ் கண்டன ஆர்ப்பாட்டம்!

X
காங்கிரஸ் கண்டன ஆர்ப்பாட்டம்!
புதுக்கோட்டையில் காங்கிரஸ் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது
ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேலாக செலவு செய்யப்பட்டு பாதுகாப்பு இல்லாத பாராளுமன்றத்தை கட்டிய பாஜக அரசை கண்டித்தும் இதனை தட்டிக் கேட்ட 142 எம்பிக்களை சஸ்பெண்ட் செய்ததை கண்டித்தும் புதுக்கோட்டையில் காங்கிரஸ் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மத்திய அரசு ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் செலவு செய்து புதிய பாராளுமன்ற கட்டிடத்தை கட்டி அங்கு தற்போது கூட்டத்துடன் நடந்து முடிந்துள்ளது. இந்த கூட்டத்தொடரில் இரண்டு நாம் மர்ம நபர்கள் பாதுகாப்பு எல்லையை மீறி பாராளுமன்றத்திற்குள் நுழைந்து கலர் பொடி புகை குப்பிகளை வீசி பரபரப்பை ஏற்படுத்திய சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தியது. புதிய பாராளுமன்ற கட்டிடம் பல கோடி ரூபாய் செலவு செய்தும் பாதுகாப்பு இல்லாத சூழ்நிலை நிலவுவதாக காங்கிரஸ் சொல்லிட்ட எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி கூட்டத்தொடரை கோஷங்களை எழுப்பிய நிலையில் 142 எதிர்க்கட்சி எம்பிக்கள் கூட்டத்தொடர் முழுவதுமாக சஸ்பெண்ட் செய்து மக்களவை சபாநாயகர் உத்தரவிட்டார். இந்த நிலையில் பாதுகாப்பு இல்லாத சூழ்நிலையில் புதிய பாராளுமன்ற கட்டிடம் கட்டப்பட்டுள்ளதாகவும் இதனை கண்டித்தும் 142 எம்பிக்கள் சத்தம் செய்தது கண்டித்தும் புதுக்கோட்டையில் காங்கிரஸ் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது அண்ணாசனை அருகே நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் முருகேசன் தலைமை வகித்தார். இதில் நூற்றுக்கும் மேற்பட்ட காங்கிரஸ் கட்சியினர் கலந்து கொண்டு மத்திய அரசுக்கு எதிராகவும் 142 எம்பிக்களை சஸ்பெண்ட் செய்ததை கண்டித்து கோஷங்களை எழுப்பினர்.
Next Story
