குடியிருப்புகள் அகற்றுவதை கண்டித்து காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்.

X
கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்
கன்னியாகுமரி மாவட்டம் கல்குளம் தாலுகா, பத்மநாபபுரம் 'ஆ' கிராமத்துக்கு உட்பட்ட புலியூர்குறிச்சி சந்தை வழியில் பல்லாண்டுகளாக வசித்து வரும் மக்களின் குடியிருப்புகளை இடிக்கப் போவதாக பொதுப்பணித்துறை அறிவித்துள்ளது. இந்த செயலை கண்டித்து பத்மநாபபுரம் நகர காங்கிரஸ் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் கல்குளம் தாலுகா அலுவலகம் முன்பு நடைபெற்றது. நகரத் தலைவர் அனு குமார் தலைமை வைத்தவர். கிள்ளியூர் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் ராஜேஷ் குமார் தொடங்கி வைத்து பேசினார். போராட்டத்தை குளச்சல் எம் எல் ஏ பிரின்ஸ் முடித்து வைத்து பேசினார்.இந்த போராட்டத்தில் மேற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் டாக்டர் பினுலால் சிங், குமாரபுரம் பேரூராட்சி தலைவர் ஜான் கிறிஸ்டோபர், மாவட்ட நிர்வாகிகள் ஜோன்ஸ் இம்மானுவேல மற்றும் நிர்வாகிகள் ஏராளம் பேர் கலந்து கொண்டனர்.
Tags
Next Story
