பாரத ஸ்டேட் பேங்க்கை கண்டித்து காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்

பாரத ஸ்டேட் பேங்க்கை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

தேர்தல் பத்திரம் மூலம் அரசியல் கட்சிகள் வாங்கிய நிதி விபரங்களை வழங்க வேண்டும் என பாரத ஸ்டேட் வங்கிக்கு உச்ச நீதி மன்றம் உத்தரவிட்டது.

ஆனால் அதனை வழங்காமல், காலதாமதப்படுத்துவதோடு பாஜக அரசிற்கு ஆதரவாக செயல்பட்டு வரும் பாரத ஸ்டேட் வங்கியின் நிர்வாகத்தை கண்டித்து , விருதுநகர் மதுரை சாலையில் உள்ள பாரத ஸ்டேட் வங்கி முன்பாக காங்கிரஸ் கட்சி சார்பில் நகர தலைவர் நாகேந்திரன் தலைமையில் , மாநில பொதுக்குழு உறுப்பினர் கிருஷ்ணமுர்த்தி, மாவட்ட குழு உறுப்பினர் வெயிலு முத்து, மாவட்ட செய்தி தொடர்பாளர் மீனாட்சிசுந்தரம் முன்னிலையில் ஏராளமான காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டு, பாரத ஸ்டேட் வங்கி மற்றும் பாஜக அரசைக் கண்டித்து கண்டன முழக்கங்களை எழுப்பி ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும் இந்த நிகழ்வின் போது, கவுன்சிலர் ராஜ்குமார், பால்பாண்டி, மஞ்சுளா, மற்றும் வட்டார, நகர, இளைஞர் காங்கிரஸ் கமிட்டி மற்றும் மகளிரணி உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story