நாடாளுமன்ற உறுப்பினர்கள் இடைநீக்கம் - காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்

நாடாளுமன்ற உறுப்பினர்கள் இடைநீக்கம் - காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்

நாடாளுமன்ற உறுப்பினர்கள் இடைநீக்கத்தை எதிர்த்து காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்

146 எம்பிக்களை இடைநீக்கம் செய்த மத்திய பாஜக அரசை கண்டித்து திருச்சி மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் இன்று நடைபெற்றது
நாடாளுமன்றத்தில் பாரதிய ஜனதா அரசு, இந்தியா கூட்டணியை சேர்ந்த காங்கிரஸ் உள்ளிட்ட 146 பாராளுமன்ற உறுப்பினர்களை இடை நீக்கம் செய்து, இந்த ஜனநாயகப் படுகொலையை கண்டித்து திருச்சி ஜங்ஷன் ரயில் நிலையம் எதிரில் உள்ள ராஜீவ் காந்தி சிலை அருகில் திருச்சி மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் மாவட்டத் தலைவர் ரெக்ஸ் தலைமையில் இன்று நடைபெறுகிறது. இந்த ஆர்ப்பாட்டத்தில் காங்கிரஸ் மாநில துணை தலைவர் சுப.சோமு, காங்கிரஸ் கட்சியின் மாநில செய்தி தொடர்பாளர் வேலுச்சாமி ஆகியோர் கண்டன உரை ஆற்றினர். மேலும் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் மாநில நிர்வாகிகள், மாவட்ட நிர்வாகிகள், காங்கிரசின் துணை அமைப்புகளான சேவா தளம்,ராஜீவ் காந்தி பஞ்சாயத்துராஜு சங்கதன் (RGPS), இளைஞர் காங்கிரஸ், மகிளா காங்கிரஸ், சிறுபான்மை பிரிவு, பட்டதாரி அணி, எஸ் சி மற்றும் எஸ்டி பிரிவு, OBC பிரிவு, முன்னாள் ராணுவ வீரர் பிரிவு ,மருத்துவர் பிரிவு, விவசாய பிரிவு, பொறியாளர் பிரிவு, வக்கீல் பிரிவு, கலைப்பிரிவு , மீனவர் அணி, இலக்கிய அணி, INTUC அமைப்புசாரா தொழிலாளர்,மனித உரிமை பிரிவு , துணை அமைப்பின் தலைவர்கள் மற்றும் கோட்ட தலைவர்கள், வார்டு தலைவர்கள், நிர்வாகிகள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துகொண்டு மத்திய பாஜக அரசுக்கு எதிராக கண்டன கோஷங்கள் எழுப்பினர்

Tags

Next Story