கொன்னையூர் கோவில் பூச்சொரிதல் விழா சிறப்பு பஸ்கள் இயக்கம் !

கொன்னையூர்  கோவில் பூச்சொரிதல் விழா சிறப்பு பஸ்கள் இயக்கம் !

சிறப்பு பஸ்கள்

கொன்னையூர் அருள்மிகு முத்துமாரியம்மன் கோயில் பூச்சொரிதல் விழாவிற்காக சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளன என புதுக்கோட்டை அரசு போக்குவரத்துக்கழக பொது மேலாளர் இளங்கோவன் தெரிவித்துள்ளார்.
புதுக்கோட்டை மார்ச் 15-புதுக்கோட்டை மாவட்ட ம் பொன்னமராவதி வட்டம் கொன்னையூர் அருள்மிகு முத்துமாரியம்மன் கோயில் பூச்சொரிதல் விழாவிற்காக சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளன என புதுக்கோட்டை அரசு போக்குவரத்துக்கழக பொது மேலாளர் இளங்கோவன் தெரிவித்துள்ளார்.இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு. எதிர்வரும் 17, 18 ஆகிய தேதிகளில் பொன்னமராவதி தாலுகா கொன்னையூர் முத்துமாரியம்மன் கோயில் பூச்சொரிதல் விழா நடக்கிறது. விழாவினை முன்னி்ட்டு திரளாக பக்தர்கள் பொதுமக்கள் வருவார்கள், என்பதால் பொதுமக்களின் நலனிற்காக 51 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளன .இந்த பஸ்கள் பொன்னமராவதி, திருப்பத்தூர், திருமயம், நமணசமுத்திரம், புதுக்கோட்டை ஆகிய ஊர்களிலிருந்து கொன்னையூருக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன. எனவே பொதுமக்கள் இந்த சிறப்பு பஸ் வசதிகளை பயன்படுத்தி கொள்ளலாம். இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Tags

Next Story