கொன்னையூர் கோயில் பங்குனி திருவிழா தீப்பந்தம் ஏந்தி பக்தர்கள் நேர்த்திக்கடன்
நேர்த்தி கடன்
கொன்னையூர் முத்துமாரியம்மன் கோயில் பங்குனி பொங்கல் திருவிழாவை முன்னிட்டு பக்தர்கள் தீபந்தம் ஏற்றி நேர்த்தி கடன் செலுத்தினர்.
பொன்னமராவதி அருகே உள்ள பிரசித்தி பெற்ற கொன்னையூர் முத்துமாரியம்மன் கோயில் பங்குனி பொங்கல் திருவிழாவை முன்னிட்டு கடந்த மாத 17ஆம் தேதி பூச்செறிதல் விழாவும் பதினெட்டாம் அக்னி காவடி விழாவும் நடந்தது. தொடர்ந்து 24 ஆம் தேதி இரவு சுவாமிக்கு காப்பு கட்டுதல் வைபவத்துடன் திருவிழா தொடங்கியது. 25ஆம் தேதி முதல் 8ஆம் தேதி வரை தினமும் மண்டக படித்தாரர்களால் சிறப்பு அபிஷேகம் நடத்தப்படுகிறது. மண்டக்காப்படி நாட்களில் இரவு நேரங்களில் அம்மன் நேரில் எழுந்தருளி வீதி உலா வரும் அப்போது கோயிலை சுற்றி ஆயிரத்துக்கும் அதிகமான பக்தர்கள் தீப்பந்தம் ஏந்தி நின்று அம்மனை வழிபடுவது வழக்கம். அதன்படி புதுகை மாவட்டம் மட்டுமின்றி வெளி மாவட்டங்களில் இருந்து வந்திருந்த பக்தர்கள் கோயில் வளாகத்தில் தங்கி அம்மன் வீதி உலாவின்போது தீப்பந்தங்களை ஏந்தி நின்று வழிபாடு நடத்தினர். திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான பொங்கல் விழா மற்றும் நாடு செலுத்துதல் திருவிழா வரும் எட்டாம் தேதி நடக்கிறது. விலா ஏற்பாடுகளை கோயில் செயல் அலுவலர் ஜெயா மற்றும் பூஜகர்கள், பணியாளர்கள் செய்துள்ளனர்
Next Story