முன்சிறை புனித ஆரோக்கிய மாதா ஆலயத்தில் அர்ச்சிப்பு விழா

குமரி மாவட்டம் புதுக்கடை , முன்சிறை புனித ஆரோக்கிய மாதா ஆலயம் உள்ளது. சுமார் 110 ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்த ஆலயம் தற்போது புதிதாக புனரமைக்கப்பட்டு, அதன் அர்ச்சிப்பு விழா நேற்று முன்தினம் மாலையில் நடந்தது.
கோட்டார் மறை மாவட்ட ஆயர் நசரேன் சூசை கலந்து கொண்டு தலைமை தாங்கி ஆலயத்தை திறந்து வைத்தார். சிறப்பு விருந்தினராக குழித்துறை மறைமாவட்டத்தின் இரண்டாவது ஆயராக தேர்ந்தெடுக்கப்பட்ட தேர்வு நிலைய ஆயர் ஆல்பர்ட் ஜார்ஜ் அலெக்சாண்டர் முன்னிலை வகித்தார்.
விழாவில் முன்னாள் பங்கு பணியாளர்கள் ஜோக்கிம், செபாஸ்டின், பிரைட் சிம்சராஜ், அகஸ்டின், பெஞ்சமின் ஆகியோர் கலந்துகொண்டு வாழ்த்தினார்கள். தொடர்ந்து கோட்டாறு மறை மாவட்ட ஆயர் நஸரேன் சூசை தலைமையில் ஆலய அர்ச்சிப்பும், ஆடம்பர கூட்டுத் திருப்பலியும் நடைபெற்றது.
விழாவில் விஜய் வசந்த் எம்.பி. ராஜேஷ்குமார் எம்.எல்.ஏ , தளவாய் சுந்தரம் எம்.எல்.ஏ ஆகியோர் கலந்துகொண்டு வாழ்த்தினார்கள். தொடர்ந்து அனைவருக்கும் அன்பு விருந்து வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை பங்கு பேரவைதலைவரும், பங்கு பணியாளருமான சேவியர் புரூஸ் தலைமையில் பங்குப் பேரவை துணைத் தலைவர் ஜஸ்டின் குமார், செயலாளர் ஏரோணிமூஸ், பொருளாளர் சிசிலி, இணைச் செயலர் பெலிஸ் பெர்னாண்டஸ் உட்பட பங்கு உறுப்பினர்கள் செய்திருந்தனர்.
